மாவட்ட செய்திகள்

வடலூர் அருகேமூதாட்டியிடம் 3 பவுன் நகை பறிப்பு + "||" + Jewelry flush

வடலூர் அருகேமூதாட்டியிடம் 3 பவுன் நகை பறிப்பு

வடலூர் அருகேமூதாட்டியிடம் 3 பவுன் நகை பறிப்பு
வடலூர் அருகே மூதாட்டியிடம் 3 பவுன் நகையை மா்ம மனிதா்கள் பறித்து சென்றனா்.
வடலூர், 

வடலூர் அருகே உள்ள புதுநகரை சேர்ந்தவர் ஏழைமுத்து மனைவி பூபதி (வயது 64). இவர் நேற்று முன்தினம் மாலை அதே பகுதியில் உள்ள கடைக்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்பி வந்தார். 

பின்னர் அவர் வீட்டின் கதவு பூட்டை திறந்த போது, பின்னால் வந்த மர்மநபர் ஒருவர் திடீரென பூபதியின் கழுத்தில் கிடந்த 3 பவுன் நகையை பறித்துக்கொண்டு, அங்கு ஏற்கனவே மோட்டார் சைக்கிளில் தயாராக இருந்த ஒருவருடன் தப்பி சென்று விட்டார். 

பறிபோன நகையின் மதிப்பு ரூ.1 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் வடலூர் போலீசார் வழக்குப்பதிவு விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. மூதாட்டியிடம் நகை பறிப்பு
மானாமதுரையில் வீட்டு வாசலில் கோலம் போட்ட மூதாட்டியிடம் நகை பறிக்கப்பட்டது.
2. பெண்ணிடம் நகை பறிப்பு
பெண்ணிடம் நகை பறித்த நபரை போலீசார் தேடிவருகின்றனர்.
3. பெண்ணிடம் நகை பறிப்பு
அருப்புக்கோட்டையில் பெண்ணிடம் நகை பறித்த சென்ற மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.
4. இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு
இளையான்குடி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் நகை பறிக்கப்பட்டது. இது தொடர்பாக 2 மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகிறார்கள்.
5. வீடு புகுந்து பெண்ணிடம் நகை பறிப்பு
வீடு புகுந்து பெண்ணிடம் நகை பறித்த மர்ம நபரை போலீசார் தேடிவருகின்றனர்.