மாவட்ட செய்திகள்

பட்டப்பகலில் துணிகரம் சார்பதிவாளர் அலுவலக ஊழியர் வீட்டில் 45 பவுன் நகை, பணம் கொள்ளை + "||" + Robbery of 45 45 worth of jewelery and cash at the home of an employee of the venture affiliate office in the afternoon

பட்டப்பகலில் துணிகரம் சார்பதிவாளர் அலுவலக ஊழியர் வீட்டில் 45 பவுன் நகை, பணம் கொள்ளை

பட்டப்பகலில் துணிகரம் சார்பதிவாளர் அலுவலக ஊழியர் வீட்டில் 45 பவுன் நகை, பணம் கொள்ளை
காஞ்சீபுரத்தில் சார்பதிவாளர் அலுவலக ஊழியர் வீட்டில் 45 பவுன் தங்க நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
சென்னை,

காஞ்சீபுரம் பெரியார் நகர், பெரிய தோட்டத்தில் வசித்து வருபவர் ராஜி. இவர், சென்னை மீனம்பாக்கம் ராணுவ அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி கவிதா. இவர், வாலாஜாபாத் சார்பதிவாளர் அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வருகிறார்.


வழக்கம்போல் ராஜி பணிக்கு சென்றுவிட்டார். கவிதா காலையில் தன் உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டார். மீண்டும் கவிதா மாலை வீடு திரும்பி வந்து பார்த்தபோது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

45 பவுன் நகை கொள்ளை

வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, வீட்டில் இருந்த 4 பீரோக்களை திறந்து அதில் இருந்த 45 பவுன் தங்க நகை, வைர தோடு மற்றும் ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் ஆகியற்றை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிந்தது.

பட்டப்பகலில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக காஞ்சீபுரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. பணம் கேட்டு மிரட்டிய மர்ம நபர்
பணம் கேட்டு மிரட்டிய மர்ம நபர் பற்றி போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
2. பிரபல சின்னத்திரை நடிகை வீட்டில் கொள்ளை - போலீஸ் விசாரணை
கேரளாவில் பிரபல சின்னத்திரை நடிகை வீட்டில் இருந்த சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்து கொள்ளை நடந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
3. படப்பை அருகே தொடர் கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளையன் கைது
படப்பை அருகே 1½ ஆண்டுகளாக 20-க்கும் மேற்பட்ட வீடுகளில் தொடர் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்த பலே கொள்ளையன் கைது செய்யப்பட்டார்.
4. லிப்ட் கேட்டு ,வாலிபரை தாக்கி கூகுள் பே மூலம் பணத்தை பறித்த கொள்ளையர்கள்
ஆவடி அருகே லிப்ட் கேட்பது போல் நடித்து வாலிபரை தாக்கி கூகுள் பே மூலம் பணத்தை பறித்த கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
5. தீபாவளியையொட்டி கட்டண கொள்ளை; 8 ஆம்னி பஸ்கள் சிக்கின ரூ.3 லட்சம் அபராதம்
தீபாவளியையொட்டி கட்டண கொள்ளை; 8 ஆம்னி பஸ்கள் சிக்கின ரூ.3 லட்சம் அபராதம்.