மாவட்ட செய்திகள்

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் சி.ஜி.எஸ்.டி. ஆணையரக அதிகாரிகள் 15 நாட்கள் தூய்மை பணி + "||" + CGST under the Clean India program Commission officials 15 days cleaning work

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் சி.ஜி.எஸ்.டி. ஆணையரக அதிகாரிகள் 15 நாட்கள் தூய்மை பணி

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் சி.ஜி.எஸ்.டி. ஆணையரக அதிகாரிகள் 15 நாட்கள் தூய்மை பணி
தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் சி.ஜி.எஸ்.டி. ஆணையரக அதிகாரிகள் 15 நாட்கள் தூய்மை பணி அண்ணாநகர், அம்பத்தூர் பகுதிகளில் நடைபெற்றது.
சென்னை,

சென்னை வடக்கு சி.ஜி.எஸ்.டி. மற்றும் மத்திய கலால் முதன்மை ஆணையர் அலுவலகமானது தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கடந்த ஆகஸ்டு 16-ந் தேதி முதல் ஆகஸ்டு 31-ந் தேதி வரை 15 நாட்களுக்கு தூய்மை பணிகளை மேற்கொண்டது.


இந்த தூய்மை பணியை கூடுதல் ஆணையர் பி.ஜெயபால சுந்தரி கடந்த மாதம் 16-ந் தேதி தொடங்கி வைத்தார். அலுவலகத்தின் அனைத்து ஊழியர்களும், தூய்மை உறுதி மொழியை எடுத்துக்கொண்டனர். பின்னர் அலுவலக தகவல்களுக்கு காகிதத்தை பயன்படுத்தாமல் எலக்ட்ரானிக் ஊடகங்களை பயன்படுத்தும்படி முதன்மை ஆணையர் விடுத்த வேண்டுகோளை கூடுதல் ஆணையர் ஏ.கிளடஸ் சுட்டிக்காட்டினார்.

இந்த 15 நாள் நிகழ்ச்சியில் சென்னை வடக்கு சி.ஜி.எஸ்.டி. மற்றும் மத்திய கலால் முதன்மை ஆணையரக அலுவலக வளாகம், அண்ணா நகர் 4, 7, 11 மற்றும் 12-வது தெருக்கள், சாந்தி காலனி, அம்பத்தூர் ஆரம்ப பள்ளி வளாகம் உள்ளிட்ட இடங்களில் ஆணையரகத்தின் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் தூய்மை பணிகளை மேற்கொண்டனர்.

மேலும், கடந்த மாதம் 25-ந் தேதி மரக்கன்று நடும் நிகழ்ச்சியிலும் ஆணையரக அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் ஈடுபட்டனர். அதோடு, கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலை, உயிரி-கழிவு சிதைவு ஆலை ஆகியவை அலுவலக வளாகத்தில் அமைக்கும் பணியும் மேற்கொள்ளப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

1. நடத்தையில் சந்தேகம் - மனைவி பணியாற்றி வரும் அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசிய கணவன்...!
சென்னை அருகே மனைவி பணியாற்றி வரும் அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசிய கணவனை போலீசார் கைது செய்தனர்.
2. கூடங்குளம் அணுமின் நிலையத்தின் 3-வது அணு உலையில் அழுத்தகலன் பொருத்தும் பணி...!
கூடங்குளம் அணுமின் நிலையத்தின் 3-வது அணு உலையில் அழுத்தகலன் பொருத்தும் பணி நடந்தது.
3. திருச்செந்தூரில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி துவக்கம்...!
திருச்செந்தூர் நகர் பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தொடங்கி உள்ளது.
4. அரசு துறைகளில் தமிழக இளைஞர்களுக்கே பணி: அனைத்து போட்டி தேர்விலும் தமிழ்மொழி தகுதித்தாள் தேர்ச்சி கட்டாயம்
அரசு துறைகளில் உள்ள அனைத்து பணியிடங்களிலும் தமிழக இளைஞர்களை நியமனம் செய்யும் பொருட்டு, அனைத்துப் போட்டி தேர்வுகளிலும் தமிழ் மொழி தகுதித்தாள் தேர்ச்சியை கட்டாயமாக்கி அரசாணை வெளியிடப்பட்டு இருக்கிறது.