மாவட்ட செய்திகள்

கூடுதலாக மணல் ஏற்றி சென்ற லாரி பறிமுதல் + "||" + Confiscation

கூடுதலாக மணல் ஏற்றி சென்ற லாரி பறிமுதல்

கூடுதலாக மணல் ஏற்றி சென்ற லாரி பறிமுதல்
திருவாடானை பகுதியில் கூடுதலாக மணல் ஏற்றி சென்ற லாரி பறிமுதல் செய்யப்பட்டது.
தொண்டி,

திருவாடானை தாலுகா தேளூர் கிராமத்தில் தாசில்தார் செந்தில்வேல் முருகன், மண்டல துணை தாசில்தார் சேதுராமன், தொண்டி வருவாய் ஆய்வாளர் அமுதன், தேளூர் கிராம நிர்வாக அலுவலர் பிரகாஷ் ஆகியோர் ஆய்வு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எம்.சாண்ட் மணலுடன் நின்ற லாரியை ஆய்வு செய்தனர். அதில் காலாவதியான அனுமதி சீட்டு வைத்திருந்த நிலையில் அளவுக்கு அதிகமாக 2 யூனிட் மணலுக்கு 8 யூனிட் எம்.சாண்ட் மணல் வைத்திருந்தது தெரியவந்துள்ளது. அதனை தொடர்ந்து லாரியை பறிமுதல் செய்த வருவாய்துறையினர் லாரி டிரைவர் சிவகங்கை மாவட்டம் கீழக்கண்டனி மகேஸ்வரன் (வயது 30) என்பவரையும் தொண்டி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.தொடர்புடைய செய்திகள்

1. சிறுவர்கள் ஓட்டி வந்த 13 வாகனங்கள் பறிமுதல்
மதுரையில் சிறுவர்கள் ஓட்டி வந்த 13 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
2. ரூ.29 லட்சம் வெளிநாட்டு பணம் பறிமுதல்
மதுரை விமான நிலையத்தில் ரூ.29 லட்சம் வெளிநாட்டு பணம் பறிமுதல்
3. 500 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
35 கடைகளில் 500 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
4. குஜராத்தில் ரூ.730 கோடி மதிப்பிலான ஹெராயின் பறிமுதல்; போலீசார் தகவல்
குஜராத்தில் ரூ.730 கோடி மதிப்பிலான ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது என்று போலீசார் அதிர்ச்சி தகவல் தெரிவித்து உள்ளனர்.
5. டெல்லி விமான நிலையத்தில் ரூ.1 கோடி மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்
டெல்லி விமான நிலையத்தில் துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.1 கோடி மதிப்பிலான 2.5 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.