மாவட்ட செய்திகள்

சாலையில் அனாதையாக கிடந்த ‘வாக்கி-டாக்கி’ கருவி போலீசார் மீட்டு, மாநகராட்சி அதிகாரியிடம் ஒப்படைத்தனர் + "||" + Police recovered a walkie-talkie orphaned on the road and handed it over to a corporation official

சாலையில் அனாதையாக கிடந்த ‘வாக்கி-டாக்கி’ கருவி போலீசார் மீட்டு, மாநகராட்சி அதிகாரியிடம் ஒப்படைத்தனர்

சாலையில் அனாதையாக கிடந்த ‘வாக்கி-டாக்கி’ கருவி போலீசார் மீட்டு, மாநகராட்சி அதிகாரியிடம் ஒப்படைத்தனர்
சாலையில் அனாதையாக கிடந்த ‘வாக்கி-டாக்கி’ கருவி போலீசார் மீட்டு, மாநகராட்சி அதிகாரியிடம் ஒப்படைத்தனர்.
சென்னை,

சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு மைதானம் எதிரில் உள்ள சாலையில் நேற்று காலை ‘வாக்கி-டாக்கி’ கருவி ஒன்று அனாதையாக கிடந்தது. அந்த கருவியை கண்டெடுத்த வேன் டிரைவர் ஆகாஷ், அண்ணாசாலை போலீசாரிடம் ஒப்படைத்தார். அண்ணாசாலை போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரமோகன், ‘வாக்கி-டாக்கி’ கருவியை சாலையில் போட்டது யார்? என்று விசாரணை நடத்தினார்.


விசாரணையில், சென்னை மாநகராட்சி சுகாதாரதுறை ஆய்வாளர் சுப்பராயலு, தனது மோட்டார் சைக்கிளில் செல்லும் போது, அந்த ‘வாக்கி-டாக்கி’யை தவறுதலாக சாலையில் போட்டுச்சென்றது தெரிய வந்தது. அதன்பேரில் ‘வாக்கி-டாக்கி’ கருவி சுப்பராயலுவிடம் பத்திரமாக ஒப்படைக்கப்பட்டது. சாலையில் கண்டெடுத்த ‘வாக்கி-டாக்கி’ கருவியை பத்திரமாக ஒப்படைத்த வேன் டிரைவர் ஆகாசுக்கு போலீசார் பாராட்டு தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. துப்பாக்கி குண்டு பாய்ந்து தொழில் அதிபர் படுகாயம் தற்கொலை முயற்சியா? போலீசார் விசாரணை
துப்பாக்கி குண்டு பாய்ந்து சென்னையில் தொழில் அதிபர் பலத்த காயம் அடைந்தார். அவர் தற்கொலை முயற்சி செய்தாரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
2. குழந்தையை ரூ.2½ லட்சத்துக்கு விற்ற தாய் - பணத்தை பறித்துச்சென்ற ரவுடிகளுக்கு போலீசார் வலைவீச்சு
சென்னையில் பிறந்து 5 நாளே ஆன பச்சிளம் ஆண் குழந்தை ரூ.2½ லட்சத்துக்கு விற்கப்பட்டது. அந்த பணத்தை குழந்தையின் தாயிடம் இருந்து பறித்து சென்ற ரவுடிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
3. உரிய விதிமுறைகள் பின்பற்றாமல் செயல்பட்ட 63 மசாஜ் கிளப்புகள் மீது போலீசார் வழக்கு
சென்னையில் உரிய விதிமுறைகள் பின்பற்றாமல் செயல்பட்ட 63 மசாஜ் கிளப்புகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். 55 கிளப்புகளை மூடிவிட்டு அதன் உரிமையாளர்கள் தப்பி ஓடிவிட்டனர்.
4. பாதுகாப்பு பணியில் 10 ஆயிரம் போலீசார்
ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் நாளை தேவர் குருபூஜை விழா நடைபெற உள்ளதையொட்டி மாவட்டம் முழுவதும் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்துள்ளார்.
5. விராலிமலை அருகே காலிமனை வாங்கியதில் மோசடி; 2 பேர் மீது வழக்கு
விராலிமலை அருகே காலிமனை வாங்கியதில் மோசடியில் ஈடுபட்ட 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.