மாவட்ட செய்திகள்

காஞ்சீபுரம் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய 9 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது + "||" + Best Author Award for 9 Outstanding Teachers in Kanchipuram District

காஞ்சீபுரம் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய 9 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது

காஞ்சீபுரம் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய 9 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது
காஞ்சீபுரம் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய 9 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருதை மாவட்ட கலெக்டர் வழங்கினார்.
காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் தமிழக அரசின் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதினை காஞ்சீபுரம் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய 9 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருதினை மாவட்ட கலெக்டர் டாக்டர் மா.ஆர்த்தி வழங்கினார்.பிறகு மாவட்ட கலெக்டர் டாக்டர் மா.ஆர்த்தி கூறியதாவது:-


பெரும்பாலான ஆசிரியர்கள் தங்களது கடமையை திறம்பட செயல்படுத்தி வருகின்றனர். அப்படி செயல்படுத்திய 9 ஆசிரியர்களுக்கு நமது மாவட்டத்தில் சிறந்த ஆசிரியர்களுக்கான தமிழக அரசின் டாக்டர். ராதாகிருஷ்ணன் விருது வழங்கப்பட்டுள்ளது.

ஆசிரிய பெருமக்களாகிய நீங்கள் அனைவரும் தனித்துவம் வாய்ந்தவர்கள். நீங்கள் அனைவரும் சிறப்பாக செயல்பட்டு நமது மாவட்டத்தினை கல்வியில் முன்மாதிரியான மாவட்டமாக உருவாக்கவும், பணியாற்றுமாறு கேட்டுக்கொண்டார்.

புனிதமான வேலை

கல்வித்துறையை பொறுத்தவரை நம் குழந்தைகளின் எதிர்காலத்தோடு கையாளுவதால் இது மிகவும் கடினமான வேலையாகும். அனைத்து பெற்றோர்களும் ஆசிரியர்களிடமே குழந்தைகளை நம்பி விடுகிறார்கள்.

எனவே, இதுபோல் புனிதமான வேலை யாருக்கும் கிடைக்காது. இவ்விடத்தில் ஆசிரியப்பெருமக்களுக்கு எனது நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் இரா.பன்னீர்செல்வம், மாவட்ட தி.மு.க.செயலாளர் க.சுந்தர் எம்.எல்.ஏ., காஞ்சீபுரம் எம்.பி., க.செல்வம், முதன்மைக் கல்வி அலுவலர் ச.அருள்செல்வம், மாவட்ட கல்வி அலுவலர்கள் சி.இராதாகிருஷ்ணன் (ஸ்ரீபெரும்புதூர்), ஏ.எல்லப்பன் (காஞ்சீபுரம்) மற்றும் ஆசிரிய பெருமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா காலகட்டத்தில் தபால் துறையில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு விருது
கொரோனா காலகட்டத்திலும் சிறப்பாக பணியாற்றிய தபால் துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் 89 பேருக்கு சென்னையில் நேற்று விருதுகள் வழங்கப்பட்டன.
2. இந்திய சர்வதேச திரைப்பட விழா- ஹேம மாலினிக்கு சிறந்த ஆளுமை விருது
கோவாவில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவில் ஹேம மாலினிக்கு இந்த ஆண்டின் சிறந்த இந்திய ஆளுமை விருது வழங்கப்பட்டது.
3. நடிகர் ரஜினிகாந்துக்கு ‘தாதா சாகேப் பால்கே’ விருது 25-ந் தேதி வழங்கப்படுகிறது
நடிகர் ரஜினிகாந்துக்கு ‘தாதா சாகேப் பால்கே’ விருது வருகிற 25-ந் தேதி டெல்லியில் நடைபெறும் விழாவில் வழங்கப்படுகிறது.
4. சர்வதேச பட விழாவில் கர்ணன், கட்டில் படங்களுக்கு விருது
பெங்களூருவில் இனோவேட்டிவ் சர்வதேச திரைப்பட விழா நடந்தது. இதில் 20 நாடுகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட படங்கள் 30-க்கும் மேற்பட்ட மொழிகளில் இருந்து தேர்வு செய்யப்பட்டு திரையிடப்பட்டன.
5. தேசிய விருது வென்ற இயக்குனரின் பாராட்டை பெற்ற சுபிக்‌ஷா
கோலி சோடா 2, கடுகு, வேட்டை நாய் படங்களில் நடித்த சுபிக்‌ஷாவை பிரபல இயக்குனர் சமூக வலைத் தளத்தில் பாராட்டி இருக்கிறார்.
!-- Right4 -->