மாவட்ட செய்திகள்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தற்காலிகமாக பட்டாசுகள் விற்பனை செய்ய விண்ணப்பிக்கலாம் + "||" + You can apply for temporary sale of firecrackers ahead of Deepavali festival

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தற்காலிகமாக பட்டாசுகள் விற்பனை செய்ய விண்ணப்பிக்கலாம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தற்காலிகமாக பட்டாசுகள் விற்பனை செய்ய விண்ணப்பிக்கலாம்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தற்காலிகமாக பட்டாசுகள் விற்பனை செய்ய விண்ணப்பிக்கலாம் மாவட்ட கலெக்டர் தகவல்.
திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது;-

திருவள்ளூர் மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையினையொட்டி பட்டாசுகள் வாங்கி விற்பனை செய்ய விரும்பும் விற்பனையாளர்கள் மற்றும் வணிகர்கள் தற்காலிக உரிமம் பெற கீழ்வரும் ஆவணங்களுடன் வருகின்ற 30-ந்தேதி வரை இ-சேவை மையங்கள் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வழிவகை ஏற்படுத்தப்பட்டுள்ளது.


அவ்வாறு விண்ணப்பிக்கும் போது கடை அமைவிடத்திற்கான சாலை வசதி, கொள்ளளவு, சுற்றுப்புறங்களை குறிக்கும் வகையிலான வரைபடம் மற்றும் கட்டிடத்திற்கான ப்ளூ பிரிண்ட் வரைபடம் (6 நகல்கள்), ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை, வரி ரசீது, ஆவணங்களை தவறாமல் சமர்ப்பிக்கவேண்டும்.

ஆன்லைன் மூலமாகவே தங்களுடைய மனு ஏற்கப்பட்டதா அல்லது நிராகரிக்கப்பட்டதா என்ற விவரத்துடன் தற்காலி உரிமத்தின் ஆணையினை வருகின்ற 15-10-2021-ந்தேதியிலிருந்து இ-சேவை மையம் மூலமாகவே பதிவிறக்கம் செய்யலாம்.

திருவள்ளூர் மாவட்டத்தில் உரிமம் இன்றி பட்டாசு விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டால் சட்டபூர்வமாக நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா தடுப்பூசி போட்ட நபர்களுக்கே மதுபானம் விற்பனை: அமைச்சர் சுப்பிரமணியன்
கொரோனா தடுப்பூசி போட்ட நபர்களுக்கு மட்டுமே டாஸ்மாக்கில் மது விற்பனை செய்யப்படும் என்று அமைச்சர் சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
2. சிவகாசியில் பயங்கரம்: வெடிவிபத்தில் 3 மாடி கட்டிடம் நொறுங்கியது; வேலை செய்த 2 பெண்கள் கதி என்ன?
சிவகாசியில் நேற்று நடந்த வெடிவிபத்தில் 3 மாடி கட்டிடம் நொறுங்கியது. அங்கு வேலை பார்த்த 2 பெண்கள் கதி என்ன? என்பது தெரியவில்லை. 2 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டனர்.
3. தீபாவளி மது விற்பனை ரூ.444 கோடி கடந்த ஆண்டைவிட ரூ.23½ கோடி குறைந்தது
தீபாவளி பண்டிகையையொட்டி தமிழகத்தில் ரூ.444 கோடியே 3 லட்சத்துக்கு மது வகைகள் விற்பனையாகி உள்ளன. இது கடந்த ஆண்டைவிட ரூ.23 கோடியே 66 லட்சம் குறைவு. மது விற்பனையில் மதுரை மண்டலம் முதலிடத்தை பிடித்துள்ளது.
4. புதுச்சேரியில் பெட்ரோல் விலை ரூ.106.98க்கு விற்பனை
புதுச்சேரியில் பெட்ரோல் விலை 34 காசுகள் உயர்ந்து ரூ.106.98க்கு விற்பனை செய்யப்படுகிறது.
5. பெங்களூருவில் 30 குழந்தைகளை கடத்தி விற்பனை; தமிழர் உள்பட 5 பேர் கைது
பெங்களூருவில் குழந்தைகளை கடத்தி விற்பனை செய்த தமிழகத்தை சேர்ந்தவர் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 12 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் 18 குழந்தைகளை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.