மாவட்ட செய்திகள்

கிணற்றில் தவறி விழுந்த மயில்கள் மீட்பு + "||" + Rescue of peacocks that fell into the well

கிணற்றில் தவறி விழுந்த மயில்கள் மீட்பு

கிணற்றில் தவறி விழுந்த மயில்கள் மீட்பு
கிணற்றில் தவறி விழுந்த மயில்கள் மீட்பு
உசிலம்பட்டி
உசிலம்பட்டி அருகே சிரங்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆண்டிச்சாமி. விவசாயியான இவரது தோட்டத்தில் உள்ள 80 அடி ஆழமுள்ள கிணற்றுக்குள் தனது 5 குஞ்சுகளுடன் மயில் தவறி விழுந்தது. இந்த மயில்கள் அனைத்தும் கிணற்றில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தன. இதனை கண்ட உடனடியாக ஆண்டிச்சாமி உசிலம்பட்டி தீயணைப்புத்துறைக்கு தகவல் அளித்தார். இதனைத்தொடர்ந்து விரைந்து வந்த உசிலம்பட்டி தீயணைப்புத் துறை நிலைய அலுவலர் தங்கம் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள், கிணற்றில் இறங்கி சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின் தாய் மயில் மற்றும் அதன் 5 குஞ்சுகளை உயிருடன் பத்திரமாக மீட்டனர். பின்னர் அதை வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. கோட்டைப்பட்டினத்தில் கடலில் மீனவர் மாயம்: 7 நாட்களுக்கு பிறகு ராமநாதபுரத்தில் சடலமாக மீட்பு
கோட்டைப்பட்டினத்தில் கடலில் மாயமான மீனவர் 7 நாட்களுக்கு பிறகு ராமநாதபுரத்தில் கடலில் சடலமாக மீட்கப்பட்டார்.
2. ராட்சத கிரேன் மூலம் இரும்பு மிதவை மீட்பு
பாம்பன் ரெயில் பாலத்தின் அருகே மோதுவது போல் நெருங்கி வந்த மிதவை ராட்சத கிரேன் மூலம் பாதுகாப்பாக மீட்கப்பட்டது.
3. கொள்ளிடம் ஆற்றில் சிக்கிய 68 மாடுகள் மீட்பு
கொள்ளிடம் ஆற்றில் சிக்கிய 68 மாடுகள் மீட்கப்பட்டன.
4. உழவு பணியின்போது கிணற்றில் டிராக்டருடன் தவறி விழுந்த டிரைவர்
உழவு பணியின்போது கிணற்றில் டிராக்டருடன் தவறி விழுந்த டிரைவர் மீட்கப்பட்டார்.