மாவட்ட செய்திகள்

கழுத்தில் மிதித்து தாயை கொன்ற கொடூர மகன் + "||" + Murder

கழுத்தில் மிதித்து தாயை கொன்ற கொடூர மகன்

கழுத்தில் மிதித்து தாயை கொன்ற கொடூர மகன்
உசிலம்பட்டி அருகே தாயின் கழுத்தில் மிதித்து கொன்ற மகனை போலீசார் கைது செய்தனர்.
உசிலம்பட்டி,

உசிலம்பட்டி அருகே தாயின் கழுத்தில் மிதித்து கொன்ற மகனை போலீசார் கைது செய்தனர்.
இந்த கொடூர சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

குடிநீர் தொட்டி ஆபரேட்டர்

மதுரை மாவட்டம், எழுமலை அருகே உள்ள கோடாங்கி நாயக்கன்பட்டியை சேர்ந்தவர் மொக்கராசு(வயது 72). இவருடைய மனைவி பெருமாயி (69). இவர்களுக்கு 2 மகள்களும், 2 மகன்களும் உள்ளனர். .இதில் மூத்த மகன் வெல்ட் ரமேஷ்(40). இவர் அதே ஊரில் உள்ள குடிநீர் தொட்டியில் ஆபரேட்டராக பணியாற்றி வருகிறார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

ஆனால் இவரது சகோதரிகள் 2 பேருக்கும், தம்பிக்கும் ஏற்கனவே திருமணம் ஆகி விட்டது. தந்தை மொக்கராசு இறந்ததால் ரமேஷ், தாயார் பெருமாயியுடன் வசித்து வந்தார்.

மிதித்து கொலை

ரமேஷ் மது குடிப்பது வழக்கம். இதை அவரது தாயார் கண்டித்து வந்தார். இந்த நிலையில் நேற்று மது அருந்துவதற்காக தனது தாயார் பெருமாயியிடம், பணம் கேட்டார். அதற்கு அவர் பணம் கொடுக்க மறுத்து உள்ளார்.
இதில் ஆத்திரம் அடைந்த ரமேஷ் தனது தாயை தாக்கி கீழே தள்ளினார். அவரது கழுத்தில் தனது காலால் ஓங்கி மிதித்தார். இதில் மூச்சு திணறி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பெருமாயி இறந்தார்.

கைது

இந்த சம்பவம் பற்றி அறிந்ததும் அக்கம், பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். இது குறித்து எழுமலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து பெருமாயி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக அவரது மகன்  ரமேசை கைது செய்தனர்.
மது குடிக்க பணம் தராததால் பெற்ற தாயை மகனே ெகாடூரமாக கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

தொடர்புடைய செய்திகள்

1. முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரும்: நளினியின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்
ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி, தன்ைன முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரி தாக்கல் செய்துள்ள மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தமிழக அரசு ஐகோர்ட்டில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
2. அம்மி கல்லை தலையில் போட்டு கணவரை கொன்ற மனைவி
மேலூரில் அம்மி கல்லை தலையில் போட்டு கணவரை மனைவி கொலை செய்தார். அவரது மனைவியிடம் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
3. கை, கால்களை கட்டிப்போட்டு முத்திரைத்தாள் விற்பனையாளர் கொலை
சின்னசேலத்தில் கை, கால்களை கட்டிப்போடு முத்திரைத்தாள் விற்பனையாளர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
4. ஒரே வீட்டில் சேர்ந்து வாழ்ந்த காதலிக்கு கொலை மிரட்டல் ஆணழகன் பட்டம் வென்றவர் கைது
திருமணம் செய்து கொள்ளாமலேயே கணவன்-மனைவி போல் ஒரே வீட்டில் சேர்ந்து வாழ்ந்த காதலிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக ஆணழகன் பட்டம் வென்றவர் கைது செய்யப்பட்டார்.
5. பா.ம.க. பிரமுகர் ராமலிங்கம் கொலை வழக்கு: 5 பேர் பற்றி துப்பு கொடுத்தால் தலா ரூ.5 லட்சம் பரிசு
பா.ம.க. பிரமுகர் ராமலிங்கம் கொலை வழக்கில் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 5 பேர் பற்றி துப்பு கொடுத்தால் தலா ரூ.5 லட்சம் ரொக்கப்பரிசு வழங்கப்படும், என்று என்.ஐ.ஏ. போலீசார் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.