மாவட்ட செய்திகள்

பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த தம்பதி மீது வழக்கு + "||" + Case filed against couple who attacked woman and threatened to kill her

பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த தம்பதி மீது வழக்கு

பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த தம்பதி மீது வழக்கு
பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த தம்பதி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள மேலக்குடியிருப்பு கிராமம் மேலத் தெருவை சேர்ந்தவர் அய்யப்பன். இவரது மனைவி அமுதா(வயது 36). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த மாரியப்பன், அவரது மனைவி தேவி ஆகியோருக்கும் இடையே இடப்பிரச்சினை காரணமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் அமுதா வீட்டில் இருந்தபோது மாரியப்பனும், தேவியும் சேர்ந்து அமுதாவை தகாத வார்த்தைகளால் திட்டி, தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இதில் காயமடைந்த அமுதா ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து அவர் அளித்த புகாரின்பேரில் மாரியப்பன், தேவி ஆகியோர் மீது ஜெயங்கொண்டம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தமிழரசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

தொடர்புடைய செய்திகள்

1. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் முதல் இடம் பிடித்த காளைக்கு பரிசாக கார் வழங்கக்கோரி வழக்கு
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில்முதல் இடம் பிடித்த காளைக்கு பரிசாக கார் வழங்கக்கோரி வழக்கில்கலெக்டர் பரிசீலிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்து உள்ளது.
2. தடையை மீறிய 5 பேர் மீது வழக்கு
எருதுகட்டு விழாவில் தடையை மீறிய 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
3. விஷம் வைத்து 45 கோழிகளை கொன்றதாக வழக்கு
விஷம் வைத்து 45 கோழிகளை கொன்றதாக வழக்கு செய்யப்பட்டது.
4. தொழிலாளியை தாக்கியவர் மீது வழக்கு
தொழிலாளியை தாக்கியவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
5. தேர்தல் முன்விரோதத்தில் வக்கீல் வீடு சூறை இந்திய கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகி உள்பட 13 பேர் மீது வழக்கு
திருக்கோவிலூர் அருகே தேர்தல் முன்விரோதத்தில் வக்கீல் வீடு சூறை இந்திய கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகி உள்பட 13 பேர் மீது வழக்கு