மாவட்ட செய்திகள்

திருமணத்திற்கு வந்த பெண்ணிடம் நகை பறிப்பு + "||" + Jewelry flush

திருமணத்திற்கு வந்த பெண்ணிடம் நகை பறிப்பு

திருமணத்திற்கு வந்த பெண்ணிடம் நகை பறிப்பு
சாத்தூரில் திருமணத்திற்கு வந்த பெண்ணிடம் நகை பறிப்பு குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர், 
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள விஜயாபுரி பகுதியை சேர்ந்தவர் காளிமுத்து. இவரது மனைவி சண்முகசுந்தரி (வயது 60). இவர்கள் இருவரும் சாத்தூர் அமீர் பாளையம் பகுதியில் நடைபெறும் திருமணத்திற்காக வந்திருந்தனர். திருமண மண்டபத்திற்கு நடந்து சென்று கொண்டிருக்கும் போது எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த 2 ஆசாமிகள் சண்முக சுந்தரியின் கழுத்தில் கிடந்த 5 பவுன் நகையை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் மாயமாகி விட்டனர். இதுபற்றி சண்முகசுந்தரி கொடுத்த புகாரின் பேரில் சாத்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. மூதாட்டியிடம் நூதன முறையில் நகை பறிப்பு
மூதாட்டியிடம் நூதன முறையில் நகை பறித்த நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
2. சாலையில் நடந்து சென்ற 2 பெண்களிடம் நகை பறிப்பு
நெல்லையில் சாலையில் நடந்து சென்ற 2 பெண்களிடம் நகை பறித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
3. பெண்ணிடம் நகை பறிப்பு
திருச்சுழி அருகே பெண்ணிடம் நகையை மர்மநபர்கள் பறித்து சென்றனர்.
4. மூதாட்டியிடம் 6 பவுன் நகை பறிப்பு
மதுரை உத்தங்குடியில் மூதாட்டியிடம் 6 பவுன் நகை பறித்த 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
5. வீட்டில் தூங்கிய பெண்ணை தாக்கி 4 பவுன் தாலிச்சங்கிலி பறிப்பு
வீட்டில் தூங்கிய பெண்ணை தாக்கி 4 பவுன் தாலிச்சங்கிலியை மர்ம நபர்கள் பறித்துச்சென்றனர்.