மாவட்ட செய்திகள்

விநாயகர் சதுர்த்தியையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜை + "||" + Special pooja in temples on the occasion of Ganesha Chaturthi

விநாயகர் சதுர்த்தியையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜை

விநாயகர் சதுர்த்தியையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜை
விநாயகர் சதுர்த்தியையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
பொள்ளாச்சி

விநாயகர் சதுர்த்தியையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது.

விநாயகர் சதுர்த்தி

நாடு முழுவதும்  விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப் பட்டது. கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபட தடை விதிக்கப் பட்டது. 

மேலும் பொதுமக்கள் வீடுகளில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட்டுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் பொள்ளாச்சி போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பொது இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளதா என்று போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்

மேலும் முக்கிய இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

கோவில்களில் பூஜை

பொது இடங்களில் சிலைகள் வைக்க தடை விதிக்கப்பட்டதால் பொள்ளாச்சி ஆனைமலை கோட்டூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பொதுமக்கள் வீடுகளில் சிறிய அளவிலான விநாயகர் சிலைகளை வைத்து வழிபட்டனர்.

 மேலும் கொழுக்கட்டை செய்து உறவினர்கள் நண்பர்களுக்கு வழங்கினார்கள்.

விநாயகர் சதுர்த்தியையொட்டி தெப்பக்குளம் வீதியில் உள்ள ராஜகணபதி கோவிலில்  விநாயகருக்கு பால், தயிர் உள்பட பல்வேறு பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. 


தொடர்புடைய செய்திகள்

1. பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை, வழிபாடு
திருவண்ணாமலை மாவட்டத்தில் புரட்டாசி மாதத்தின் கடைசி சனிக்கிழமையான நேற்று பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
2. சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் 18 வகையான அபிஷேகம்-சிறப்பு பூஜை
மகாளய அமாவாசைெயாட்டி சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் 18 வகையான அபிஷேகம், சிறப்பு பூஜை நடந்தது. ஆனால் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டது.
3. முருகன் கோவிலில் சிறப்பு பூஜை
வெம்பக்கோட்டை அருகே உள்ள முருகன் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
4. பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை
புரட்டாசி சனிக்கிழமையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
5. சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமி கோவிலில் சிறப்பு பூஜை
அமாவாசையையொட்டி சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமி கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது.