மாவட்ட செய்திகள்

ஆலங்குடி வாலிபரிடம் ரூ.45 ஆயிரம் மோசடி + "||" + fraud

ஆலங்குடி வாலிபரிடம் ரூ.45 ஆயிரம் மோசடி

ஆலங்குடி வாலிபரிடம் ரூ.45 ஆயிரம் மோசடி
புதிய ரக மோட்டார் சைக்கிளை குறைந்த விலைக்கு தருவதாக கூறி ஆலங்குடி வாலிபரிடம் ரூ.45 ஆயிரம் மோசடி செய்த மர்ம ஆசாமியை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
புதுக்கோட்டை, 
புதிய ரக மோட்டார் சைக்கிளை குறைந்த விலைக்கு தருவதாக கூறி ஆலங்குடி வாலிபரிடம் ரூ.45 ஆயிரம் மோசடி செய்த மர்ம ஆசாமியை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
மோட்டார் சைக்கிள்
ஆலங்குடி அருகே பூவரசக்குடி பகுதியை சேர்ந்தவர் அஜித்குமார் (வயது 25). இவர் தனது முகநூலில்  புதிய ரக மோட்டார் சைக்கிள் குறைந்த விலைக்கு விற்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட விளம்பரத்தை பார்வையிட்டார். அதன் லிங்கை அஜித்குமார் கிளிக் செய்த நிலையில் மர்ம ஆசாமி, வாட்ஸ்-அப் மூலம் அஜித்குமாரை தொடர்பு கொண்டார்.
மேலும் தான் ராணுவ வீரர் எனவும், தற்போது விஜயவாடா விமான நிலையத்தில் பணியாற்றி வருவதாகவும் கூறினார். மோட்டார் சைக்கிளுக்கான பணத்தை கூகுள் பே மூலம் அனுப்ப கூறினார்.
வலைவீச்சு
இதையடுத்து, அஜித்குமாரும் ரூ.44 ஆயிரத்து 500-ஐ அனுப்பினார். ஆனால் தெரிவித்தப்படி மோட்டார் சைக்கிளை அவர் விற்கவில்லை. இதுகுறித்து புதுக்கோட்டை சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் அஜித்குமார் புகார் அளித்தார். 
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த மர்ம ஆசாமியை வலைவீசி தேடி வருகிறார்கள்.


தொடர்புடைய செய்திகள்

1. பெல் ஊழியரிடம் ரூ.2.95 லட்சம் மோசடி செய்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
பெல் ஊழியரிடம் ரூ.2.95 லட்சம் மோசடி செய்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
2. முதியவரிடம் வங்கி விவரங்களை பெற்று ரூ.50 ஆயிரம் மோசடி
வங்கி மேலாளர் என பேசி முதியவரிடம் வங்கி விவரங்களை பெற்று ரூ.50 ஆயிரம் மோசடி செய்தவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
3. வங்கியில் கவரிங் நகையை அடகு வைத்து ரூ.4¾ லட்சம் மோசடி
மதுரையில் வங்கியில் கவரிங் நகையை அடகு வைத்து ரூ.4¾ லட்சம் மோசடி செய்தவர் மீது போலீசார் வழக்குபதிவு செய்யப்பட்டு உள்ளது.
4. தொழிலாளியிடம் 1 லட்சத்து 40 ஆயிரம் மோசடி
தொழிலாளியிடம் 1 லட்சத்து 40 ஆயிரம் மோசடி தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
5. திருச்சி என்ஜினீயரிடம் ரூ.25½ லட்சம் மோசடி செய்தவர் மீது வழக்கு
திருவள்ளூரில் மார்க்கெட் பகுதியில் கட்டிடம் கட்டுவதாக கூறி திருச்சி என்ஜினீயரிடம் ரூ.25½ லட்சம் மோசடி செய்தவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.