மாவட்ட செய்திகள்

திருவள்ளூர் அருகே தனியார் நிறுவனத்தில் அழுகிய நிலையில் காவலாளி பிணம் + "||" + The body of a guard was found in a decomposing state at a private company near Tiruvallur

திருவள்ளூர் அருகே தனியார் நிறுவனத்தில் அழுகிய நிலையில் காவலாளி பிணம்

திருவள்ளூர் அருகே தனியார் நிறுவனத்தில் அழுகிய நிலையில் காவலாளி பிணம்
திருவள்ளூர் அருகே தனியார் நிறுவனத்தில் அழுகிய நிலையில் காவலாளி பிணமாக மீட்கப்பட்டார்.
திருவள்ளூர், 

திருவள்ளூரை அடுத்த செம்பரம்பாக்கம் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் மோகன் (வயது 60). இவர் திருவள்ளூரை அடுத்த திருமழிசை சிட்கோவில் உள்ள தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை செய்து வந்தார். இந்த நிலையில் கடந்த 4-ந்தேதி இரவு வழக்கம் போல் மோகன் வேலைக்கு சென்றார். மீண்டும் அவர் வீடு திரும்பவில்லை. 

மோகனை அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் நிறுவனத்தில் மோகனின் உடல் அழுகிய நிலையில் கிடப்பது தெரியவந்தது.

இது குறித்து மோகனின் மகன் மூர்த்தி வெள்ளவேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் இது சம்பந்தமாக வழக்குப்பதிவு செய்து மோகனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.