மாவட்ட செய்திகள்

கொரோனா தடுப்பூசி முகாம் + "||" + corona

கொரோனா தடுப்பூசி முகாம்

கொரோனா தடுப்பூசி முகாம்
18 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது.
கீழக்கரை, 
தமிழகத்தில் கொரோனா வைரஸ் 3-வது அலை தடுப்பு நடவடிக்கையாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் கீழக்கரை தாசில்தார் முருகேசன் தலைமையில் வட்டார மருத்துவ ரசிக்தீன் துணை தாசில்தார் பழனிக்குமார் நகராட்சி தூய்மைபணி ஆய்வாளர் பூபதி ஆகியோர் முன்னிலையில் கீழக்கரையில் அரசு மருத்துவமனை, நகராட்சி அலுவலகம், கிராம அதிகாரி அலுவலகம், ஆரம்ப சுகாதார நிலையம் மறவர் தெரு அரசுபள்ளி, தெற்குத் தெரு பள்ளிவாசல், சொக்கநாதர் கோவில் அங்கன்வாடி, முத்துசாமிபுரம் தொடக்கப்பள்ளி, சின்னக்கடை தெரு அங்கன்வாடி, ஹமீதியா மெட்ரிக் பள்ளி, போன்ற 18 இடங்களில் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. மேலும் ரேஷன் பொருட்கள் வாங்க வருபவர்கள் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் என்று வட்ட வழங்கல் அலுவலர் பழனிக்குமார் பொது மக்களிடையே வலியுறுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. 250 ஊராட்சிகளில் 100 சதவீதம் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது கலெக்டர் பாலசுப்பிரமணியம் தகவல்
கடலூர் மாவட்டத்தில் 250 ஊராட்சிகளில் 100 சதவீதம் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக கலெக்டர் பாலசுப்பிரமணியம் தெரிவித்தார்.
2. மெகா தடுப்பூசி முகாம்; இதுவரை 14.56 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது
ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, பல லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
3. கொரோனா தடுப்பூசி முகாமில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு
சென்னையில் இன்று நடைபெற்று வரும் கொரோனா தடுப்பூசி முகாமில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
4. 5-வது கட்டமாக 909 இடங்களில் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் ஒரு லட்சம் பேருக்கு செலுத்த இலக்கு
கடலூர் மாவட்டத்தில் 5-வது கட்டமாக 909 இடங்களில் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடக்கிறது. இதில் ஒரு லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
5. 900 இடங்களில் இன்று கொரோனா தடுப்பூசி முகாம்
விருதுநகர் மாவட்டத்தில் 900 இடங்களில் இன்று கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.