மாவட்ட செய்திகள்

வேடசந்தூரில் பின்னிப்பிணைந்து விளையாடிய பாம்புகள் + "||" + Knitted snakes

வேடசந்தூரில் பின்னிப்பிணைந்து விளையாடிய பாம்புகள்

வேடசந்தூரில் பின்னிப்பிணைந்து விளையாடிய பாம்புகள்
வேடசந்தூரில் பின்னிப்பிணைந்து விளையாடிய பாம்புகளை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.
வேடசந்தூர்:
வேடசந்தூரில், பத்ரகாளியம்மன் கோவிலின் பின்பகுதியில் குடகனாறு உள்ளது. இந்த ஆற்றை ஒட்டியுள்ள புதர் பகுதியில் நேற்று மாலை சுமார் 7 அடி நீளம் கொண்ட 2 பாம்புகள் ஒன்றுடன் ஒன்று பின்னி பிணைந்தபடி விளையாடியது. இதனை சிலர் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர். 
மேலும் இந்த தகவல் அப்பகுதியில் காட்டுத்தீ போல் பரவியது. இதனால் வேடசந்தூரை சேர்ந்த பலரும் அங்கு சென்று பாம்புகள் பின்னி விளையாடியதை பார்த்தனர். அவர்களில் சிலர் பாம்புகள் விளையாடியதை தங்களது செல்போன்களில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்தனர். 
இந்த பாம்புகள் தொடர்ந்து 15 நிமிடங்களுக்கு மேல் பின்னி பிணைந்து விளையாடியது குறிப்பிடத்தக்கது.