மாவட்ட செய்திகள்

மாநகர பஸ் கண்ணாடி உடைப்பு; வாலிபர் கைது + "||" + City bus glass breaking; Valipar arrested

மாநகர பஸ் கண்ணாடி உடைப்பு; வாலிபர் கைது

மாநகர பஸ் கண்ணாடி உடைப்பு; வாலிபர் கைது
மாநகர பஸ் கண்ணாடி உடைப்பு; வாலிபர் கைது.
ஆவடி,

செங்குன்றத்தில் இருந்து ஆவடி நோக்கி நேற்று முன்தினம் இரவு மாநகர பஸ்(தடம் எண் 61 ஆர்) வந்து கொண்டிருந்தது. பஸ்சில் 50 பயணிகள் இருந்தனர். ஆவடியை அடுத்த கோவில்பதாகை பெருமாள் கோவில் அருகே பஸ் வந்தபோது அங்குள்ள ஒரு மதுக்கடையில் மது அருந்தி விட்டு வெளியே வந்த வாலிபர் ஒருவர், திடீரென சாலையில் கிடந்த கல்லால் அடித்து மாநகர பஸ்சின் பின்பக்க கண்ணாடியை உடைத்தார். நல்லவேளையாக பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

இதுபற்றி பஸ் டிரைவர் சிவா (வயது 34) அளித்த புகாரின்பேரில் ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் வழக்குப்பதிவு செய்து பஸ் கண்ணாடியை அடித்து உடைத்த அதே பகுதியை சேர்ந்த ஜெயசீலன் (23) என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. கருணாநிதி, மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறு: பா.ஜ.க. பிரமுகர் கல்யாணராமன் கைது
கருணாநிதி, மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறு: பா.ஜ.க. பிரமுகர் கல்யாணராமன் கைது - சைபர் கிரைம் போலீசாருடன் தொண்டர்கள் வாக்குவாதம்.
2. ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.87 லட்சத்தை இழந்தவர் கண்ணீர் புகார் மோசடி நபர் அதிரடி கைது
சென்னையில் ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.87 லட்சத்தை இழந்த நபர் கண்ணீருடன் கொடுத்த புகார் அடிப்படையில் மோசடி நபர் கைது செய்யப்பட்டார்.
3. பெண்களை ஆபாச படம் எடுத்து மிரட்டிய போலி டைரக்டர் கைது
சினிமாவில் நடிக்க வைப்பதாக பெண்களை ஏமாற்றி உல்லாசம் அனுபவித்து, ஆபாச படம் எடுத்து மிரட்டிய போலி டைரக்டர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து துப்பாக்கி, 12 ஏ.டி.எம். கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
4. கவனத்தை திசை திருப்பி வயதானவர்களிடம் பணம்-நகை பறிப்பு
சென்னையில் வயதானவர்களிடம் பணம், நகை பறிக்கும் குற்றத்தில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டார்.
5. வாடிக்கையாளர்களின் ஆவணங்களை திருடி வீட்டு உபயோக பொருட்கள் வாங்கி மோசடி: 2 பேர் கைது
சென்னையில் உள்ள எலக்ட்ரானிக் பொருட்கள் விற்பனை செய்யும் ஷோரூம்களில் பொருட்களை தவணை முறையில் வாங்க, வாடிக்கையாளர்களுக்கு தனியார் பைனான்ஸ் நிறுவனம் கடனுதவி கொடுத்து வருகிறது.