மாவட்ட செய்திகள்

‘நீட்’ தேர்வை 1,446 மாணவ-மாணவிகள் எழுதினர் + "||" + neet exam

‘நீட்’ தேர்வை 1,446 மாணவ-மாணவிகள் எழுதினர்

‘நீட்’ தேர்வை 1,446 மாணவ-மாணவிகள் எழுதினர்
கரூரில் 2 மையங்களில் நடந்த ‘நீட்’ தேர்வை 1,446 மாணவ-மாணவிகள் எழுதினர்.
கரூர்,
‘நீட்’ தேர்வு
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்பட இளநிலை மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான தகுதியாக ‘நீட்’ தேர்வை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. அதன்படி ஆண்டுதோறும் ‘நீட்’ தேர்வு அடிப்படையிலேயே மாணவர்கள் மருத்துவ கல்லூரிகளில் சேர்க்கப்பட்டு வருகிறார்கள். இந்த ஆண்டுக்கான ‘நீட்’ தேர்வு நேற்று நடைபெற்றது.
கரூர் மாவட்டத்தில் காக்காவாடியில் அமைந்துள்ள வேலம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ஆயிரத்து 20 பேரும், வெண்ணைமலை கொங்குகலை அறிவியல் கல்லூரியில் 457 பேர் என மொத்தம் 1,477 மாணவ-  மாணவிகள் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர். காலை 11 மணி முதலே மாணவ-மாணவிகள் தேர்வு மையங்களுக்கு குவிந்தனர்.
கடும் கட்டுப்பாடுகள்
தேர்வு எழுத வரும் மாணவ-மாணவிகளுக்கு ஏற்கனவே கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்ததால் சங்கிலி, மூக்குத்தி, வளையல்கள் அணிந்து வந்த மாணவிகள் அதனை தங்களது பெற்றோரிடம் கழற்றி கொடுத்தனர்.  பகல் 11.30 மணிக்கு மேல் தேர்வு மையத்திற்குள் மாணவ-மாணவிகள் அனுமதிக்கப்பட்டனர். முன்னதாக வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டு, சானிடைசர் மூலம் கைகளை சுத்தம் செய்யப்பட்ட  பிறகே உள்ளே  அனுப்பி வைக்கப்பட்டனர்.
 நுழைவு வாயிலில் போலீசார் மற்றும் மைய ஊழியர்கள் நின்று மாணவ-மாணவிகளை கடும் சோதனை செய்து அனுமதித்தனர். ஆடை உள்ளிட்டவைகளை கண்காணித்தும், ஹால் டிக்கெட், அடையாள அட்டை ஆகியவற்றை சரிபார்த்த பின்னர் மாணவ-மாணவிகள் அனுமதிக்கப்பட்டனர். பேனா, பென்சில் உள்ளிட்ட எந்த பொருட்களும் எடுத்து செல்ல அனுமதிக்காததால் சில மாணவர்கள் கையில் வைத்திருந்த பேனாக்களை பெற்றோரிடம் கொடுத்து விட்டு சென்றதை காணமுடிந்தது.
1,446 பேர் எழுதினர்
முகக்கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு முகக்கவசம் கொடுத்து மையத்திற்குள் அனுப்பி வைத்தனர். மேலும் பாஸ்போட்டு போட்டோவை மறந்து விட்டு வந்த சில மாணவ-மாணவிகளுக்கு அங்கேயே உடனடியாக போட்டோ எடுத்து கொடுத்து அனுப்பி வைத்தனர்.
‘நீட்’ தேர்வு பிற்பகல் 2 மணிக்கு தொடங்கி மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது. மாவட்டத்தில் 2 மையங்களில் மொத்தம் ஆயிரத்து 446 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினர். 31 பேர் தேர்வுக்கு வரவில்லை.

தொடர்புடைய செய்திகள்

1. நீட் தேர்வு:தமிழக அளவில் நாமக்கல் மாணவன், மாணவி முதலிடம்
அகில இந்திய அளவில் கீதாஞ்சலி 23-வது இடத்தையும், பிரவீன் 30-வது இடத்தையும், அர்ஜிதா 60-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.
2. நீட் தேர்வு: ஒடிசா முதல்-மந்திரியை சந்தித்த கனிமொழி எம்பி
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 12 மாநிலங்களை நீட் தேர்வுக்கு எதிராக ஒருங்கிணைக்கும் வகையில் ஆதரவு திரட்டி வருகின்றார்.
3. நீட் தேர்வு விலக்கு: கவர்னரை இன்று சந்திக்கிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்!
நீட் தேர்வு விலக்கு தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை கவர்னரை சந்திக்கிறார்.
4. நீட் நுழைவுத்தேர்வு புதிய பாடத்திட்டம் அடுத்த ஆண்டு அமல் - சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தகவல்
சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ படிப்புகளுக்கான மாற்றப்பட்ட நீட் நுழைவுத்தேர்வு பாடத்திட்டம் அடுத்த ஆண்டு முதல் அமல்படுத்தப்படும் என சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
5. நீட் தேர்வுக்கு எதிராக 12 மாநில முதல்- மந்திரிகளுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்
நீட் தேர்வுக்கு எதிராக 12 மாநில முதல்- மந்திரிகளுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.