மாவட்ட செய்திகள்

பாளையங்கோட்டை சிறை கைதி சாவு + "||" + Palayankottai prison inmate death

பாளையங்கோட்டை சிறை கைதி சாவு

பாளையங்கோட்டை சிறை கைதி சாவு
பாளையங்கோட்டை சிறை கைதி சாவு
நெல்லை:
நெல்லை மாவட்டம் பணகுடி அருேக உள்ள அழகிய செட்டிபுரத்தை சேர்ந்தவர் சுப்பையா (வயது 70). இவர் தனது முதல் மனைவியின் மகன் இசக்கிமுத்து மற்றும் அவரது நண்பர் தண்டையார்குளத்தைச் சேர்ந்த இசக்கிபாண்டியன் ஆகியோருடன் சேர்ந்து, 2-வது மனைவியின் மகன் அஜித்குமார் (21) என்பவரை கொலை செய்தார்.
இதுகுறித்து கூடங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சுப்பையாவை கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர். அங்கு அவருக்கு கடந்த 4-ந் தேதி திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உடனே அவரை பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சிறை காவலர்கள் சேர்த்தனர். எனினும் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று சுப்பையா பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து பெருமாள்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.