மாவட்ட செய்திகள்

வீட்டில் சிலிண்டர் வெடித்ததால் பரபரப்பு + "||" + Stir as the cylinder explodes in the house

வீட்டில் சிலிண்டர் வெடித்ததால் பரபரப்பு

வீட்டில் சிலிண்டர் வெடித்ததால் பரபரப்பு
துவரங்குறிச்சியில் வீட்டில் சிலிண்டர் வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
துவரங்குறிச்சி
திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சி சந்தைப்பேட்டை தெருவைச் சேர்ந்தவர் சிக்கந்தர் (வயது 49). இவர் வீட்டில் நேற்று காலை சமையல் வேலை நடைபெற்று கொண்டிருந்தது. அப்போது எண்ணெய் சட்டியில் திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியது. இதைப்பார்த்த குடும்பத்தினர் தீயை அணைக்க முயன்ற நிலையில் தீ மளமளவென பரவி சிலிண்டருக்கும், கியாஸ் அடுப்பிற்கு செல்லும் குழாயில் தீ பரவத் தொடங்கியது. இதுபற்றி துவரங்குறிச்சி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின்பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது ஒரு சிலிண்டர் வெடித்தது.
பரபரப்பு
இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டதுடன் பொதுமக்கள் அந்த பகுதியில் திரண்டனர். பின்னர், மற்றொரு சிலிண்டரை தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்பாக அகற்றினர். இதனால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இருப்பினும் ஒரு சிலிண்டர் வெடித்து சிதறியதில் அந்த வீட்டில் அதிக அளவில் சேதம் ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.