மாவட்ட செய்திகள்

களக்காடு அருகேமோட்டார் சைக்கிளில் இருந்துதவறி விழுந்த பெண் பலி + "||" + From the motorcycle Failed woman killed

களக்காடு அருகேமோட்டார் சைக்கிளில் இருந்துதவறி விழுந்த பெண் பலி

களக்காடு அருகேமோட்டார் சைக்கிளில் இருந்துதவறி விழுந்த பெண் பலி
மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பெண் பலி
களக்காடு:
களக்காடு அருகே மகனுடன் மோட்டார்சைக்கிளில் சென்றபோது அதில் இருந்து தவறி விழுந்து பெண் இறந்தார்.
இந்த பரிதாப சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
ேமாட்டார்சைக்கிளில்...
களக்காடு அருகே தம்பிதோப்பு நடுத்தெருவை சேர்ந்தவர் மாடசாமி. கூலி தொழிலாளி. இவருடைய மனைவி சரசுவதி (வயது 65).
 இவர் சம்பவத்தன்று திசையன்விளையில் நடந்த உறவினரின் திருமண விழாவில் பங்கேற்பதற்காக தன்னுடைய மகனுடன் மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு சென்றார்.
களக்காடு- நாங்குநேரி ரோடு பெருமாள்குளம் விலக்கு அருகில் சென்றபோது, எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிளில் இருந்து சரசுவதி தவறி விழுந்தார்.
பலி
இதில் படுகாயமடைந்த அவரை நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி சரசுவதி பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்த புகாரின்பேரில், களக்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
..........