மாவட்ட செய்திகள்

கோவில்பட்டியில்ஆதித்தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம் + "||" + athitamilar party protest in kovilpatti

கோவில்பட்டியில்ஆதித்தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

கோவில்பட்டியில்ஆதித்தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
கோவில்பட்டியில் ஆதித்தழிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்
கோவில்பட்டி:
கோவில்பட்டி இ.எஸ்.ஐ. மருத்துவமனை முன்பு ஆதித்தமிழர் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பனை செய்வதை கண்டித்தும், விவசாயிகளை வஞ்சிக்கும் 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும். மீனவர்கள் வாழ்வாதாரத்தை பறிக்கும் இந்திய கடல்சார் மீன்வள புதிய சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
ஆர்ப்பாட்டத்துக்கு வடக்கு மாவட்ட செயலாளர் சேகர் தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர் முத்துசாமி, மாநில அமைப்பு செயலாளர் திலீபன், மாவட்ட துணை தலைவர் சுரேஷ், தொழிலாளர் அணி மாவட்ட தலைவர் முத்துராஜ், மாநில பொருளாளர் விடுதலைவீரன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த சீனிவாசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி முருகன், காங்கிரஸ் சேவா தளம் மாவட்ட தலைவர் சக்தி விநாயகர் உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.