மாவட்ட செய்திகள்

சங்கராச்சாரியாரிடம் கவர்னர் ஆசி + "||" + Governor's blessing to Sankaracharya

சங்கராச்சாரியாரிடம் கவர்னர் ஆசி

சங்கராச்சாரியாரிடம் கவர்னர் ஆசி
தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் இன்னும் சில தினங்களில் பஞ்சாப் மாநில கவர்னராக பதவி ஏற்க உள்ளார்.
காஞ்சீபுரம்,

தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் இன்னும் சில தினங்களில் பஞ்சாப் மாநில கவர்னராக பதவி ஏற்க உள்ளார். இந்த நிலையில் காஞ்சீபுரம் ஓரிக்கை மணிமண்டபத்தில் சாதுர்மாஸ்ய விரதம் மேற்கொண்டு வரும் காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளை சந்திக்க கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஓரிக்கை மணி மண்டபத்துக்கு வருகை புரிந்தார்.

காஞ்சீபுரம் ஓரிக்கை மணிமண்டபத்துக்கு வருகை தந்த தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை, மாவட்ட நிர்வாகம் சார்பில் காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் சுதாகர், ஆகியோர் மலர் கொத்து கொடுத்து வரவேற்றனர். காஞ்சி சங்கர மடம் சார்பில் மடத்தின் மேலாளர் சுந்தரேச அய்யர் மாலை அணிவித்து மரியாதை செய்து மண்டபத்திற்குள் அழைத்து சென்றார். இதைத்தொடர்ந்து ஓரிக்கை மணிமண்டபத்தில் சாமி தரிசனம் செய்த பிறகு காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளை சந்தித்து கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஆசி பெற்றார். இதைதொடர்ந்து காஞ்சி சங்கராச்சாரியாருடன் 10 நிமிடங்கள் தனிமையில் ஆலோசனை மேற்கொண்ட அவர் சென்னை திரும்பினார்.

இந்த நிகழ்ச்சியில் பா.ஜ.க. மாநில நெசவாளர் அணி தலைவர் நாகுஷா, மாநில செயற்குழு உறுப்பினர் காஞ்சீபுரம் குமாரசாமி, மாவட்ட தலைவர் கே. எஸ்.பாபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. கவர்னரை இன்று சந்திக்கிறார் எடப்பாடி பழனிசாமி
கவர்னர் ஆர்.என்.ரவியை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று சந்தித்து பேசுகிறார்.
2. மத்திய மந்திரியாக பதவியேற்பு எல்.முருகனுக்கு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் வாழ்த்து
மத்திய மந்திரியாக பதவியேற்பு எல்.முருகனுக்கு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் வாழ்த்து.
3. வேளாண்மைக்கு தனி பட்ஜெட் உழவர் சந்தைக்கு புத்துயிர் அரசு வேலைவாய்ப்பில் தமிழில் படித்தவர்களுக்கு முன்னுரிமை கவர்னர் உரையில் அறிவிப்பு
வேளாண்மைக்கு தனி பட்ஜெட் போடப்படும் என்றும், அரசு வேலை வாய்ப்பில் தமிழில் படித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் தமிழக சட்டசபையில் கவர்னர் அறிவித்தார்.
4. கவர்னர் உரை ஏமாற்றம் அளிக்கிறது: தமிழகத்திற்கு தேவையான முக்கிய முன்னோடி திட்டங்கள் எதுவும் இடம் பெறவில்லை
தமிழகத்திற்கு தேவையான முக்கிய முன்னோடி திட்டங்கள் எதுவும் கவர்னர் உரையில் இடம் பெறவில்லை என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
5. கருணாநிதியால் தொடங்கப்பட்ட உழவர் சந்தைகளுக்கு புத்துயிர் அளித்து தமிழகம் முழுவதும் தொடங்கப்படும் சட்டசபையில் கவர்னர் உரை
முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியால் தொடங்கப்பட்ட உழவர் சந்தைகளுக்கு புத்துயிர் அளிக்கப்பட்டு, மாநிலம் முழுவதும் உழவர் சந்தைகள் அமைக்கப்படும் என்றும், விவசாயிகளின் நலனைப் பாதுகாக்க அரசின் மேற்பார்வையில் கிராமப்புறச் சந்தைகள் உருவாக்கப்படும் என்றும் கவர்னர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.