மாவட்ட செய்திகள்

தீக்காயம் அடைந்த தொழிலாளி சாவு + "||" + Death of a burnt worker

தீக்காயம் அடைந்த தொழிலாளி சாவு

தீக்காயம் அடைந்த தொழிலாளி சாவு
திருச்செந்தூரில் தீக்காயம் அடைந்த தொழிலாளி இறந்தார்.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் தேரடி தெருவை சேர்ந்தவர் செல்லப்பா (வயது 57). தொழிலாளியான இவருக்கு வீரமனோகரி என்ற மனைவியும் ஒரு மகள், மகன் உள்ளனர். இவருக்கு மதுகுடிப்பழக்கம் இருந்தது. கடந்த 11-ந் தேதி அளவுக்கதிகமாக மது குடித்த நிலையில் கோவில் தெருவில் உள்ள குப்பை தொட்டியின் அருகில் விழுந்து விட்டார். அதில் அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. மேலும் போதையில் பீடி பற்ற வைத்துள்ளார். அதில் உள்ள கங்குகள் குப்பைகளில் பட்டு குப்பையில் தீ பற்றி செல்லப்பா பலத்த தீக்காயம் அடைந்தார்.  அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்குமுதலுதவி சிகிச்சைக்கு பின்னர், மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்து திருச்செந்தூர் கோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


தொடர்புடைய செய்திகள்

1. ஏரியூர் அருகே மொபட் மீது வேன் மோதி தொழிலாளி சாவு
ஏரியூர் அருகே மொபட் மீது வேன் மோதி தொழிலாளி இறந்தார்.
2. விபத்தில் காயமடைந்த தொழிலாளி சாவு
ஆத்தூரில் விபத்தில் காயமடைந்த தொழிலாளி இறந்தார்.
3. மின்சாரம் பாய்ந்து தொழிலாளி சாவு
பழனி அருகே கட்டிட வேலையின்போது மின்சாரம் பாய்ந்து தொழிலாளி ஒருவர் பலியாகினார்.
4. தீக்குளித்த தொழிலாளி சாவு
கம்பத்தில் கட்சி கொடிக்கம்பத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக தீக்குளித்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி இறந்தார்.
5. கண்மாயில் மீன்பிடித்தபோது தண்ணீரில் மூழ்கி தொழிலாளி சாவு
தேவகோட்டை அருகே கண்மாயில் மீன்பிடித்தபோது தண்ணீரில் மூழ்கி தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.