மாவட்ட செய்திகள்

திருப்பத்தூர் மாவட்டத்தில் 4 தொகுதிகளில் 1,038 வாக்குசாவடிகள் + "||" + 1,038 polling stations in 4 constituencies

திருப்பத்தூர் மாவட்டத்தில் 4 தொகுதிகளில் 1,038 வாக்குசாவடிகள்

திருப்பத்தூர் மாவட்டத்தில்  4 தொகுதிகளில் 1,038 வாக்குசாவடிகள்
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்குச்சாவடி பட்டியலை கலெக்டர் வெளியிட்டார். இந்த பட்டியல் படி 1,038 வாக்குச்சாவடிகள் உள்ளது.
திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்குச்சாவடி பட்டியலை கலெக்டர் வெளியிட்டார். இந்த பட்டியல் படி 1,038 வாக்குச்சாவடிகள் உள்ளது.

கலெக்டர் வெளியிட்டார்

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி, ஆம்பூர், ஜோலார்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்குச்சாவடி பட்டியலை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் கலெக்டர் அமர்குஷ்வாஹா வெளியிட்டார்.

அப்போது கலெக்டர் பேசியதாவது:-

 1,038 வாக்குசாவடி

வாணியம்பாடி தொகுதியில் ஏற்கனவே 256 வாக்குச்சாவடிகள் இருந்தன. புதிதாக 3 வாக்குசாவடி உருவாக்கப்பட்டு மொத்தம் 259 வாக்குசாவடி உள்ளது. ஆம்பூர் தொகுதியில் 242 வாக்குசாவடி இருந்தது. புதிதாக 3 வாக்குசாவடி உருவாக்கப்பட்டு மொத்தம் 245 வாக்குசாவடிகளும், ஜோலார்பேட்டை தொகுதியில் மாற்றமின்றி 267 வாக்குசாவடிகளும், திருப்பத்தூர் தொகுதியில் புதிதாக 2 வாக்குசாவடி உருவாக்கப்பட்டு மொத்தம் 267 வாக்குசாவடிகள் உள்ளது. 

இதன்படி திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளில் புதிதாக 8 வாக்குசாவடி உருவாக்கப்பட்டு மொத்தம் 1,038 வாக்குசாவடி உள்ளது.

கருத்து தெரிவிக்கலாம்

தற்போது வெளியிடப்படும் வரைவு வாக்குச்சாவடி பட்டியல்களில் மாற்றங்கள் ஏதேனும் ஏற்படுத்த வேண்டும் எனில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் தங்களது கருத்தினை வருகிற 20-ந் தேதிக்குள் மாவட்ட கலெக்டருக்கு எழுத்து மூலமாக வழங்கலாம். அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினரிடமிருந்து எழுத்து மூலமான கருத்துரு ஏதும் வரப்பெறாத நிலையில், 13.9.2021-ந் தேதியன்று வெளியிடப்பட்ட வரைவு வாக்குச்சாவடி பட்டியலே இறுதியானது என முடிவு செய்யப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கூட்டத்தில் திருப்பத்தூர் சப்-கலெக்டர்  அலர்மேல்மங்கை, கலெக்டரின் நேர்முக உதவியாளர் வில்சன்ராஜசேகர் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.