மாவட்ட செய்திகள்

வேலூர் மாவட்டத்துக்கு 24 ஆயிரம் கோவிஷீல்டு தடுப்பூசி மருந்துகள் வருகை + "||" + 24 thousand Govshield vaccines visit

வேலூர் மாவட்டத்துக்கு 24 ஆயிரம் கோவிஷீல்டு தடுப்பூசி மருந்துகள் வருகை

வேலூர் மாவட்டத்துக்கு 24 ஆயிரம் கோவிஷீல்டு தடுப்பூசி மருந்துகள் வருகை
24 ஆயிரம் கோவிஷீல்டு தடுப்பூசி மருந்துகள் வருகை
வேலூர்

வேலூர் மாவட்டத்தில் கொரோனாவினால் ஏற்படும் உயிரிழப்பை தடுக்க 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. நிரந்தர தடுப்பூசி மையம், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், சிறப்பு முகாம்களில் தினமும் பொதுமக்கள் தடுப்பூசி போடுவதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 

வேலூர் மாவட்டத்தில் இதுவரை சுமார் 6 லட்சம் பேருக்கு முதல் தவணை கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் நடைபெற்ற மாபெரும் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமில் ஒரேநாளில் 51,715 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. அதனால் கையிருப்பில் காணப்பட்ட அனைத்து தடுப்பூசிகளும் காலியானது. 
இந்த நிலையில் சென்னையில் இருந்து வேலூர் மாவட்டத்துக்கு நேற்று காலை 24 ஆயிரம் கோவிஷீல்டு தடுப்பூசி மருந்துகள் வந்தன. அவை அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், தடுப்பூசி முகாமிற்கு பிரித்து அனுப்பி வைக்கப்பட்டன என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.