மாவட்ட செய்திகள்

தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு3 வயது குழந்தையுடன் பெண் தீக்குளிக்க முயற்சி + "||" + Try to set fire to the girl

தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு3 வயது குழந்தையுடன் பெண் தீக்குளிக்க முயற்சி

தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு3 வயது குழந்தையுடன் பெண் தீக்குளிக்க முயற்சி
தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு 3 வயது குழந்தையுடன் பெண் தீக்குளிக்க முயன்றார்.
தர்மபுரி:
தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு 3 வயது குழந்தையுடன் பெண் தீக்குளிக்க முயன்றார்.
தீக்குளிக்க முயற்சி
கடத்தூர் அடுத்த நத்தமேடு பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேஷ் (வயது28). இவரது மனைவி சத்யா (24). இவர்களுக்கு திருமணம் ஆகி 3 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் சத்யா தனது  குழந்தையுடன் தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார் விரைந்து சென்று தீக்குளிக்கும் முற்சியை தடுத்தனர். மேலும் அந்த பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தினர். 
அப்போது அந்த பெண் போலீசாரிடம் கூறுகையில், எனது மாமியார் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாகவும், வரதட்சணை கொடுக்காவிட்டால் தனது கணவருக்கு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து வைப்பதாகவும் மிரட்டி வருகிறார். இதுதொடர்பாக கடத்தூர், அரூர் போலீஸ் நிலையங்கள் மற்றும் தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் ஆகிய இடங்களில் பலமுறை புகார் கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. 
நடவடிக்கை எடுக்க வேண்டும்
தற்போது யார் ஆதரவும் இல்லாமல் தனது பெற்றோர் வீட்டில் குழந்தையுடன் இருந்து வருகிறேன். வரதட்சணை கொடுமை செய்யும் எனது மாமியார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். எனது கணவருடன் சேர்ந்து வாழ போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார். தொடர்ந்து அந்த பெண்ணை போலீசார் விசாரணைக்காக தர்மபுரி டவுன் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். இந்த தீக்குளிப்பு முயற்சி சம்பவத்தால் தர்மபுரி கலெக்டர் அலுவலக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

1. தர்மபுரி கலெக்டர் அலுவலக வளாகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி போலீசார் தடுத்து நிறுத்தி விசாரணை
தர்மபுரி கலெக்டர் அலுவலக வளாகத்தில் பெட்ரோலை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்ற பெண்ணை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினார்கள்.
2. புதிதாக கட்டிய கழிவறை இடிப்பு; பெண் தீக்குளிக்க முயற்சி - நாகர்கோவிலில் பரபரப்பு
நாகர்கோவிலில் புதிதாக கட்டிய கழிவறையை இடித்ததால் அதிகாரிகள் முன் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.