மாவட்ட செய்திகள்

மரத்தில் கார் மோதி ஒருவர் பலி + "||" + One killed in car crash in tree

மரத்தில் கார் மோதி ஒருவர் பலி

மரத்தில் கார் மோதி ஒருவர் பலி
மரத்தில் கார் மோதி ஒருவர் பலியானார்.
கடையம்:

அம்பை அருகே உள்ள ஊர்காடு வடக்கு தெருவைச் சேர்ந்தவர் சிவசுப்பிரமணியன் (வயது 42). இவரது மகளுக்கு வருகிற 16-ந் தேதி பூப்புனித நீராட்டு விழா நடைபெற உள்ளது. இதற்காக அழைப்பிதழ் கொடுப்பதற்காக சிவசுப்பிரமணியன், அதே ஊர் வடக்கு கோட்டை தெருவைச் சேர்ந்த கார்த்திக் என்ற இசக்கி ராஜா ஆகியோர் ஒரு காரில் தென்காசிக்கு சென்று கொண்டு இருந்தனர். காரை தங்கமாரி (35) என்பவர் ஓட்டினார்.

கடையம் அருகே உள்ள மாதாபுரம் பகுதியில் வந்த போது, சாலையில் நாய் குறுக்கே பாய்ந்தது. அதன் மீது மோதிய கார் சாலையோரத்தில் உள்ள புளியமரத்தில் மோதியது. இதில் 3 பேரும் படுகாயம் அடைந்தனர். 
இதுகுறித்து தகவல் அறிந்த கடையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கார்த்திக் என்ற இசக்கி ராஜா பரிதாபமாக இறந்தார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

தொடர்புடைய செய்திகள்

1. எந்திரம் மீது மோதி ஒருவர் பலி
எந்திரம் மீது மோதி ஒருவர் பலியானார்.
2. நாமக்கல் மாவட்டத்தில் புதிதாக 62 பேருக்கு கொரோனா; ஒருவர் பலி
நாமக்கல் மாவட்டத்தில் மேலும் 62 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.
3. வாகனம் மோதி ஒருவர் பலி
கயத்தாறு அருகே வாகனம் மோதி ஒருவர் பலியானார்.
4. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் ஒருவர் பலி
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் ஒருவர் பலி புதிதாக 70 பேருக்கு தொற்று
5. வாகனம் மோதி ஒருவர் பலி
வீரகேரளம்புதூர் அருகே வாகனம் மோதி ஒருவர் பலியானார்.