மாவட்ட செய்திகள்

முக கவசத்தை மறந்த மக்கள் + "||" + Face shield

முக கவசத்தை மறந்த மக்கள்

முக கவசத்தை மறந்த மக்கள்
வத்திராயிருப்பில் முக கவசத்தை அணிவதை மக்கள் மறந்து விட்டனர்.
வத்திராயிருப்பு, 
கொேரானா பரவலை தடுக்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதில் ஒரு பகுதியாக கண்டிப்பாக அனைவரும் முக கவசம் அணிய வேண்டும். 
அபராதம் 
சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் வலியுறுத்தி வருகிறது. அவ்வாறு முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது. 
ஆனால் இன்னும் ஒரு சிலர் முக கவசம் அணிவதை மறந்து தான் வெளியில் சுற்றி திரிகின்றனர். ெகாரோனா நோயின் தாக்கம் பற்றி தெரிந்தும், அவர்கள் இன்னும் அலட்சியமாக தான் உள்ளனர்.  வத்திராயிருப்பு பஸ் நிலையத்திற்கு தினமும் எண்ணற்ற பேர் பல்வேறு கிராமங்களில் இருந்து வந்து செல்கின்றனர். 
சமூக இடைவெளி 
அவ்வாறு வருபவர்களில் பெரும்பாலாேனார் முக கவசம் அணிவதில்லை. சமூக இடைவெளியை மறந்து தான் நிற்கின்றனர். 
அதேபோல பஸ்சில் ஏறும் போது ஒருவரை ஒருவர் முண்டியடித்து கொண்டு தான் ஏறுகின்றனர். பஸ்களிலும் சமூக இடைவெளி மாயமாகி விட்டது. இதனால் வத்திராயிருப்பு பகுதியில் கொரோனா தொற்று அதிகரிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. 
கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு விழிப்புணர்வுகளையும், தடுப்பூசி முகாம்களையும் தொடர்ச்சியாக நடத்தி வந்தாலும் நோயின் தன்மை பற்றி உணராமல் ஒரு சிலர் இன்னும் விதிமுறைகளை மறந்து தான் சுற்றி திரிகின்றனர். 
எனவே முக கவசம் இன்றி வெளியே வருபவர்கள் மீதும், சமூக இடைெவளியை பின்பற்றா தவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம்
அருப்புக்ேகாட்டையில் முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
2. முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம்
ஆலங்குளத்தில் முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
3. முக கவசம் அணியாதவர்கள் மீது நடவடிக்கை
முக கவசம் அணியாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
4. முக கவசம் அணியாதவர்களுக்கு கொரோனா பரிசோதனை
திண்டுக்கல் பஸ் நிலையத்தில் முக கவசம் அணியாதவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
5. கடை உரிமையாளர்களுக்கு அபராதம்
திண்டுக்கல் மாவட்டம் சத்திரப்பட்டியில் முக கவசம் அணியாத கடை உரிமையாளர்களுக்கு சுகாதாரத்துறையினர் அபராதம் விதித்தனர்.