மாவட்ட செய்திகள்

காஞ்சீபுரம் கோர்ட்டு சுவரை தாண்டி ரவுடி ஓடியதால் பரபரப்பு + "||" + Rowdy ran over the wall of Kanchipuram court

காஞ்சீபுரம் கோர்ட்டு சுவரை தாண்டி ரவுடி ஓடியதால் பரபரப்பு

காஞ்சீபுரம் கோர்ட்டு சுவரை தாண்டி ரவுடி ஓடியதால் பரபரப்பு
காஞ்சீபுரம் கோர்ட்டு சுவரை தாண்டி ரவுடி தப்பி ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை,

காஞ்சீபுரம் பிள்ளையார்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பத்மநாபன் (வயது 23). ரவுடியான இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. தன்னை குற்ற விசாரணை முறிவு சட்டம் 110 பிரிவின் கீழ் நன்னடத்தை பிணையில் விடுவிக்க போலீசாரிடம் விண்ணப்பித்துள்ளார்.அவரை நன்னடத்தை பிணையில் விடுவிக்க 2 ஜாமீன்தாரர்கள் தேவை என போலீசார் தெரிவித்தனர். இதனால் கோர்ட்டு வளாகத்தின் பின்புறம் பிள்ளையார்பாளையம் பகுதியில் உள்ள தனது வீட்டுக்கு செல்ல கோர்ட்டு வளாக சுற்றுச்சுவரை ஏறி குதித்து சென்றதாக கூறப்படுகிறது.

இதனை கண்காணிப்பு கேமராவில் பார்த்த போலீசார், கோர்ட்டு வளாகத்தில் இருந்த கைதி தப்பி ஓடியதாக தவறாக புரிந்துகொண்டு அவரை தேடி வந்தனர்.

நன்னடத்தை ஜாமீன்

இந்தநிலையில் நன்னடத்தை ஜாமீனுக்கு 2 ஜாமீன்தாரர்களை தயார் செய்துகொண்டு ரவுடி பத்மநாபன் மீண்டும் சிவகாஞ்சி போலீஸ் நிலையத்துக்கு வந்தார்.

இதையடுத்து கோர்ட்டு வளாகத்தில் இருந்து தப்பி ஓடியதாக கூறப்பட்ட பத்மநாபனை, நன்னடத்தை ஜாமீனில் விடுவிக்க சிவகாஞ்சீ போலீசார், காஞ்சீபுரம் வருவாய் கோட்டாட்சியரிடம் அழைத்துச் சென்றனர். பத்மநாபனை ஓராண்டு நன்னடத்தை ஜாமீனில் விடுவிக்க வருவாய் கோட்டாட்சியர் உத்தரவிட்டார்.

தொடர்புடைய செய்திகள்

1. காஞ்சீபுரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம்
காஞ்சீபுரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம் மாவட்ட கலெக்டர் மா.ஆர்த்தி தலைமையில் நடந்தது.
2. சசிகலாவுக்கு எதிரான வழக்கில் கர்நாடக அரசுக்கு ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
சிறையில் சொகுசு வசதி பெற சசிகலா ரூ.2 கோடி லஞ்சம் கொடுத்த வழக்கில் கர்நாடக அரசுக்கு ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. 4 வாரத்திற்குள் அரசின் உள்துறை முதன்மை செயலாளர் நேரில் ஆஜராக வேண்டும் என்று ஐகோர்ட்டு தனது உத்தரவில் கூறியுள்ளது.
3. காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான நடமாடும் கண்காணிப்பு குழு வாகனங்கள் தயார்
காஞ்சீபுரத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான நடமாடும் கண்காணிப்பு குழு வாகனங்கள் 3 ஒன்றியங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளது.
4. கருங்கல்லில் தலை மோதி வாலிபர் சாவு
காஞ்சீபுரம் அருகே ஓரிக்கையை சேர்ந்தவர் மோகனகிருஷ்ணன். இவர் அங்குள்ள ஒரு ஜெராக்ஸ் கடைக்கு சென்றுள்ளார். அப்போது அதே பகுதியை சேர்ந்த பாலாஜி என்பவர் மோகனகிருஷ்ணனிடம் பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது.
5. காஞ்சீபுரம் அருகே மின்சாரம் தாக்கி குழந்தை சாவு
காஞ்சீபுரம் அருகே மின்சாரம் தாக்கி 3 வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.