மாவட்ட செய்திகள்

வாலிபர் விஷம் குடித்து தற்கொலை + "||" + Adolescent commits suicide by drinking poison

வாலிபர் விஷம் குடித்து தற்கொலை

வாலிபர் விஷம் குடித்து தற்கொலை
ஆறுமுகநேரி அருகே வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
ஆறுமுகநேரி:
ஆறுமுகநேரி அருகேயுள்ள தெற்கு ஆத்தூர் ஐயாநகர் பகுதியை சேர்ந்த கந்தசாமி மகன் முருகன் (வயது 60). இவருக்கு மனைவியும், 4 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர். இதில் இவரது மகன் கார்த்திக்( 22) முத்தையாபுரத்தில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து முடித்துள்ளார். மேலும் வேலை தேடிய நிலையில் இவருக்கு சென்னை ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை கிடைத்துள்ளது. ஆனால் கார்த்திக் சென்னை செல்ல விரும்பாததால் தூத்துக்குடி பகுதியில் வேலை கிடைத்தால் தான் வேலை செய்வேன் என்று கூறியுள்ளார். இதை தந்தை முருகன் கண்டித்துள்ளார். இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் கார்த்திக் மனமுடைந்து காணப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் புதிதாக கட்டியுள்ள வீட்டில் விஷம் குடித்த நிலையில் கார்த்திக் மயங்கி கிடந்துள்ளார். இதை பார்த்து பதறிப்போன பெற்றோரும், அக்கம் பக்கத்தினரும் அவரை ஆம்புலன்ஸ் மூலம் ஆத்தூர் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அவரை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஆத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அய்யப்பன் விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக,  தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். இதுகுறித்து ஆத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஷம் குடித்து தற்கொலை
நெல்லையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
2. முதியவர் விஷம் குடித்து தற்கொலை
பாளையங்கோட்டையில் முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
3. டி.வி. மெக்கானிக் விஷம் குடித்து தற்கொலை
பாவூர்சத்திரம் அருகே டி.வி. மெக்கானிக் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
4. டீக்கடைக்காரர் விஷம் குடித்து தற்கொலை
நெல்லையில் டீக்கடைக்காரர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
5. மருந்து விற்பனை பிரதிநிதி தற்கொலை
வள்ளியூரில் மருந்து விற்பனை பிரதிநிதி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.