மாவட்ட செய்திகள்

கொடைக்கானல் அருகே லாரி கவிழ்ந்து விபத்து + "||" + Lorry accident

கொடைக்கானல் அருகே லாரி கவிழ்ந்து விபத்து

கொடைக்கானல் அருகே லாரி கவிழ்ந்து விபத்து
கொடைக்கானல் அருகே லாரி கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.
கொடைக்கானல்:
அரியலூர் பகுதியில் இருந்து சிமெண்டு மூட்டைகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று கொடைக்கானல் அருகே உள்ள பள்ளங்கி நோக்கி நேற்று சென்று கொண்டிருந்தது. வில்பட்டி பிரிவு அருகே சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோர பள்ளத்தில் திடீரென்று கவிழ்ந்தது. இதில் லாரியின் பின் சக்கரம் கழன்று சென்றது. 
இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த விபத்தில் லாரி டிரைவர் உள்பட 4 பேர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். அதேநேரத்தில் எதிர்திசையில் வாகனங்கள் ஏதும் வராத காரணத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதனையடுத்து போலீசார் விரைந்து சென்று லாரியை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்தனர். அதிக பாரம் காரணமாக மலைப்பாதையில் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. 
எனவே கொடைக்கானல் மலைப்பகுதியில் சோதனைச் சாவடிகள் அமைத்து அதிக பாரம் ஏற்றி வரும் வாகனங்களை திருப்பி அனுப்ப வேண்டுமென பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.