மாவட்ட செய்திகள்

பி.எஸ்.என்.எல். ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம் + "||" + BSNL Pensioners protest

பி.எஸ்.என்.எல். ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

பி.எஸ்.என்.எல். ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்
கோவில்பட்டியில் பி.எஸ்.என்.எல். ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கோவில்பட்டி:
 அகில இந்திய பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்கம், பி.எஸ்.என்.எல். மற்றும் தொலைத் தொடர்பு ஓய்வூதியர் சங்கம், தமிழ்நாடு தொலைத் தொடர்பு ஒப்பந்த ஊழியர் சங்கம் சார்பில், கோவில்பட்டி பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு, பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்கத் தலைவர் மகேந்திரமணி, அகில இந்திய பி.எஸ்.என்.எல். மற்றும் தொலைத் தொடர்பு ஓய்வூதியர் சங்கத் தலைவர் மீனாட்சிசுந்தரம், ஒப்பந்த ஊழியர் சங்கத் தலைவர் ஆறுமுகம் ஆகியோர் தலைமை தாங்கினர்.
பொதுத்துறை நிறுவனங்களை விற்பனை செய்யக் கூடாது. ஒவ்வொரு மாதமும் மாதத்தின் கடைசி நாளான்று சம்பளம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
 ஆர்ப்பாட்டத்தில், சஞ்சார் நிகாம் அதிகாரிகள் சங்கச் செயலாளர் கோலப்பன், பி.எஸ்.என்.எல். மற்றும் தொலைத் தொடர்பு ஓய்வூதியர் சங்க மாவட்ட உதவிச் செயலாளர் சுப்பையா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
திசையன்விளையில் தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
2. டாஸ்மாக் ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
40 சதவீத போனஸ் வழங்கக்கோரி டாஸ்மாக் ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
3. டாஸ்மாக் ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
விருதுநகரில் டாஸ்மாக் ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
4. இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
5. கோவில் நகைகளை உருக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு; இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்
கோவில் நகைகளை உருக்கும் திட்டத்தை கைவிடக்கோரி மதுரை, அலங்காநல்லூரில் இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.