மாவட்ட செய்திகள்

வடமதுரை அருகே தொழிலாளியை தாக்கிய 2 பேர் கைது + "||" + 2 arrested for attacked worker

வடமதுரை அருகே தொழிலாளியை தாக்கிய 2 பேர் கைது

வடமதுரை அருகே தொழிலாளியை தாக்கிய 2 பேர் கைது
வடமதுரை அருகே தொழிலாளியை தாக்கிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
வடமதுரை:
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள பெரியசூரியூரை சேர்ந்தவர் வினோத் (வயது 24). தொழிலாளி. இவருக்கும், இவரது உறவினர்களான வடமதுரை ரெட்டியபட்டியை சேர்ந்த தங்கவேல் (22), ஆண்டவர் (22) ஆகியோருக்கும் இடையே சொத்து பிரச்சினை காரணமாக முன்விரோதம் இருந்து வந்தது. 
இந்தநிலையில் கடந்த 12-ந்தேதி வினோத் ரெட்டியபட்டிக்கு வந்தார். அப்போது அவரிடம் தங்கவேல், ஆண்டவர் ஆகியோர் முன்விரோதம் காரணமாக தகராறு செய்தனர். மேலும் 2 பேரும் சேர்ந்து வினோத்தை இரும்பு கம்பியால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த வினோத்தை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். 
இதுகுறித்து வடமதுரை போலீஸ் நிலையத்தில் வினோத் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தங்கவேல், ஆண்டவர் ஆகியோரை கைது செய்தனர்.