மாவட்ட செய்திகள்

வாகனம் மோதி வாலிபர் பலி + "||" + death

வாகனம் மோதி வாலிபர் பலி

வாகனம் மோதி வாலிபர் பலி
தளவாய்புரம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி வாலிபர் பலியானார்.
தளவாய்புரம், 
தளவாய்புரம் அருகே உள்ள புத்தூர் காட்டுநாயக்கர் காலனி தெருவை சேர்ந்தவர் கருப்பு அழகு (வயது 27). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் தளவாய்புரத்தில் உள்ள ஒரு வெல்டிங் பட்டறையில் கூலி வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் இவர் வேலையை முடித்துவிட்டு தனது சைக்கிளில் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தார். அப்போது சைக்கிளில் செட்டியார்பட்டி இரட்டைப்பாலம் பகுதியில் செல்லும்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி தலையில் படுகாயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே அவர்  பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தளவாய்புரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவரது உடல் ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லவகுசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 


தொடர்புடைய செய்திகள்

1. தீயில் கருகி இளம்பெண் சாவு
மதுரையில் தீயில் கருகி இளம்பெண் பலியானார்.
2. குட்டையில் மூழ்கி பள்ளி மாணவன் சாவு
குட்டையில் மூழ்கி பள்ளி மாணவன் பரிதாபமாக இறந்தான்.
3. லாரி மோதி தொழிலாளி சாவு
லாரி மோதி தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
4. மோட்டார் சைக்கிள்கள் மோதல்; கணவன் பலி
அருப்புக்கோட்டை அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் கணவன் பலியானார்.
5. சரக்கு வாகனம் மோதி வாலிபர் பலி
சிவகாசியில் தாய் கண் முன் சரக்கு வாகனம் ேமாதி வாலிபர் பரிதாபமாக இறந்தார்.