மாவட்ட செய்திகள்

உள்ளாட்சி அமைப்புகளில் 27 பதவிகளுக்கான தேர்தல்: வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது- மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தகவல் + "||" + local body election

உள்ளாட்சி அமைப்புகளில் 27 பதவிகளுக்கான தேர்தல்: வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது- மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தகவல்

உள்ளாட்சி அமைப்புகளில் 27 பதவிகளுக்கான தேர்தல்: வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது- மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தகவல்
உள்ளாட்சி அமைப்புகளில் 27 பதவிகளின் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று (புதன்கிழமை) தொடங்குகிறது.
ஈரோடு
உள்ளாட்சி அமைப்புகளில் 27 பதவிகளின் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று (புதன்கிழமை) தொடங்குகிறது.
27 பதவிகள்
ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:-
ஈரோடு மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் கடந்த 2019-ம் ஆண்டு நிரப்பப்பட்ட பதவிகளில் இறப்பு, பதவி விலகல் காரணமாக கடந்த ஜூன் மாதம் 30-ந் தேதி வரை 27 காலியிடங்கள் ஏற்பட்டு உள்ளன. இதற்கான தற்செயல் தேர்தல் ஈரோடு, மொடக்குறிச்சி, கொடுமுடி, பெருந்துறை, சென்னிமலை, அம்மாபேட்டை, அந்தியூர், பவானி, நம்பியூர், டி.என்.பாளையம், பவானிசாகர் ஆகிய 11 ஊராட்சி ஒன்றியங்களில் நடைபெற உள்ளது.
அம்மாபேட்டை ஒன்றியத்தில் மாவட்ட ஊராட்சி வார்டு எண்- 5, ஈரோடு ஒன்றியம் வார்டு உறுப்பினர் எண்- 4, பெருந்துறை ஒன்றியம் வார்டு உறுப்பினர் எண்- 10 மற்றும் 4 ஊராட்சி தலைவர் பதவி, 20 ஊராட்சி வார்டு கவுன்சிலர்கள் ஆகியவற்றுக்கு தேர்தல் நடக்கிறது.
வேட்பு மனு தாக்கல்
இந்த தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று (புதன்கிழமை) தொடங்குகிறது. வருகிற 22-ந் தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வேட்பு மனுக்கள் பெறப்படும். 23-ந் தேதி காலை 10 மணிக்கு வேட்பு மனு பரிசீலனை செய்யப்படும். 25-ந் தேதி பிற்பகல் 3 மணி வரை வேட்பு மனுவை திரும்ப பெற்று கொள்ளலாம்.
வருகிற அக்டோபர் மாதம் 9-ந் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கிறது. 12-ந் தேதி காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. 16-ந் தேதி தேர்தல் நடவடிக்கை நிறைவு பெறுகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட வார்டு கவுன்சிலர்கள், ஊராட்சி தலைவர்களின் பதவி ஏற்பு முதல் கூட்டம் 20-ந் தேதி நடக்கிறது.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி கூறிஉள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல்: காலை 9 மணி நிலவரப்படி 7.72% வாக்குப்பதிவு
தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தலில் காலை 9 மணி நிலவரப்படி 7.72% வாக்குகள் பதிவாகியுள்ளதாக மாநிலத் தேர்தல் ஆணையர் பழனிகுமார் தெரிவித்துள்ளார்.
2. உள்ளாட்சி தேர்தல்: வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்திடும் வகையில் பணியாற்ற வேண்டும் - அதிமுக தலைமை
ஊரக உள்ளாட்சி தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்திடும் வகையில் பணியாற்ற வேண்டும் என்று அதிமுக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு கட்சி தலைமை அறிவுறுத்தி உள்ளது.
3. ஊரக உள்ளாட்சி தேர்தல்; விதிமுறைகளை மீறி விளம்பரம் செய்யும் வேட்பாளர்கள்
ஊரக உள்ளாட்சி தேர்தலில் விதிமுறைகளை மீறி வேட்பாளர்கள் விளம்பரம் செய்வதாக பொதுமக்கள் குறறம்சாட்டினர்.
4. உள்ளாட்சி தேர்தல்: பொழிச்சலூரில் கமல்ஹாசன் பிரசாரம்
பரங்கிமலை ஒன்றியத்துக்கு உட்பட்ட பொழிச்சலூர், பொழிச்சலூர், வேங்கைவாசல் பகுதிகளில் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன், நேற்று மாலை பிரசாரம் மேற்கொண்டார்.
5. உள்ளாட்சி தேர்தல்: மது விற்பனை செய்யத் தடை
உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் பகுதிகளில் மது விற்க தடை விதித்து, மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.