மாவட்ட செய்திகள்

கோவில் திருவிழாவை நடத்த அனுமதிக்க கோரி தாசில்தார் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை- சாமியாடிய பெண்ணின் கை எலும்பு முறிந்ததால் பரபரப்பு + "||" + Villagers besiege Tashildar's office

கோவில் திருவிழாவை நடத்த அனுமதிக்க கோரி தாசில்தார் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை- சாமியாடிய பெண்ணின் கை எலும்பு முறிந்ததால் பரபரப்பு

கோவில் திருவிழாவை நடத்த அனுமதிக்க கோரி தாசில்தார் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை- சாமியாடிய பெண்ணின் கை எலும்பு முறிந்ததால் பரபரப்பு
வாழப்பாடி அருகே கோவில் திருவிழாவை நடத்த அனுமதிக்க கோரி தாசில்தார் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டனர். அப்போது சாமியாடிய பெண்ணின் கை எலும்பு முறிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
வாழப்பாடி:
வாழப்பாடி அருகே கோவில் திருவிழாவை நடத்த அனுமதிக்க கோரி தாசில்தார் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டனர். அப்போது சாமியாடிய பெண்ணின் கை எலும்பு முறிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவில் திருவிழா
வாழப்பாடி அருேக வி.குமாரபாளையத்தில் மாரியம்மன் மற்றும் மதுரை வீரன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் திருவிழா நடத்துவதற்கு, ஊர் பெரியவர்கள் மற்றும் கிராம மக்கள் ஏற்பாடு செய்தனர். இதனிடையே கிராமத்தில் 20-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வரும் பகுதியில் வழிப்பாதை அடைக்கப்பட்டதாக தெரிகிறது. இந்த பாதையை மீட்டுக்கொடுத்த பிறகுதான் கிராமத்தில் திருவிழா நடத்த வேண்டுமென ஒரு தரப்பினர் தெரிவித்தனர். இதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக இரு தரப்பினருக்கு இடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது. இதையடுத்து பிரச்சினைக்கு சமரச தீர்வு காண வாழப்பாடி தாசில்தார் வரதராஜன் தலைமையில் இரு தரப்பினரையும் அழைத்து, நேற்று பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போது  ஒரு மாதத்திற்குள் வழித்தடப்பிரச்சினைக்கு சம்பந்தப்பட்டவர்கள் பேசி தீர்வு காண வேண்டும். பாதை பிரச்சினை முடிந்தாலும், முடியாவிட்டாலும் ஒரு மாதத்திற்கு பிறகு கோவில் திருவிழாவை நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. 
முற்றுகை
இந்த நிலையில் கோவில் திருவிழாவை உடனே நடத்த அனுமதிக்க கோரி கிராம மக்கள் 100-க்கும் மேற்பட்டவர்கள்  வாழப்பாடி தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். ேமலும் அங்கிருந்த அலுவலர்களிடம் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர். 
அப்போது பெண்கள் சிலர் சாமியாடியபடி திருவிழாவை ஒரு மாதத்துக்கு பிறகு நடத்தாமல், உடனே நடத்துவதற்கு அனுமதிக்க வேண்டுமென கூச்சலிட்டனர். இதனிடையே சாமியாடிய கருப்பாயி என்ற பெண் கீழே விழுந்ததில் அவரது கை எலும்பு முறிந்தது. உடனே அவரை அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். தொடர்ந்து அதிகாரிகள், அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதன்பின்னர் மாலையில் அவர்கள் கலைந்து சென்றனர். 
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.