மாவட்ட செய்திகள்

கந்துவட்டி வசூலித்ததாக நிதி நிறுவனங்கள் மீது வழக்கு + "||" + Case against financial institutions for charging vested interest

கந்துவட்டி வசூலித்ததாக நிதி நிறுவனங்கள் மீது வழக்கு

கந்துவட்டி வசூலித்ததாக நிதி நிறுவனங்கள் மீது வழக்கு
கந்துவட்டி வசூலித்ததாக நிதி நிறுவனங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி அருகே உள்ள கோரம்பள்ளத்தை சேர்ந்தவர் திருமணி. இவருடைய மனைவி மல்லிகா (வயது 52). இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு புதுக்கோட்டை, கோரம்பள்ளம், தூத்துக்குடி பகுதியை சேர்ந்த 4 நிதி நிறுவனங்கள், மகளிர் சுய உதவிக்குழுக்கள் மற்றும் கோரம்பள்ளத்தை சேர்ந்த சிலரிடமும் மொத்தம் ரூ.15 லட்சம் கடன் வாங்கி இருந்தாராம். இதற்கு முறையாக வட்டி செலுத்தி வந்தாராம். இந்த நிலையில் நிதிநிறுவனங்கள், மகளிர் சுயஉதவிக்குழுவினர், மல்லிகா மொத்தம் ரூ.26 லட்சம் செலுத்த வேண்டும் என்று கூறினார்களாம். இது குறித்து மல்லிகா புதுக்கோட்டை போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார், 4 நிதிநிறுவனங்கள், 6 மகளிர் சுய உதவிக்குழுக்கள் மற்றும் 5 பேர் மீது கந்துவட்டி வசூலித்ததாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.