மாவட்ட செய்திகள்

ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் நூதன போராட்டம் + "||" + Innovative struggle of the Democratic Youth Union

ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் நூதன போராட்டம்

ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் நூதன போராட்டம்
தூத்துக்குடி முத்தையாபுரத்தில் ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் நூதன போராட்டம் நடத்தினர்.
ஸ்பிக்நகர்:
தூத்துக்குடி மாநகராட்சி முத்தையாபுரம் பகுதியில் உள்ள முனியசாமி கோவில் தெரு, பெரியார்நகர், தோப்புத்தெரு ஆகிய சாலைகளை உடனடியாக சீரமைக்க வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் கை, கால்களில் காய கட்டு போட்டு நூதன போராட்டம் நடத்தினர்.  கிளை தலைவர் முத்து ராஜா தலைமை தாங்கினார். போரட்டத்தை மாவட்ட செயலாளர் முத்து தொடங்கி வைத்து பேசினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு புறநகர் செயலாளர் ராஜா போராட்டத்தை நிறைவு செய்து பேசினார். இந்தப் போராட்டத்தில் கிளை உறுப்பினர்கள் ரஞ்சித் குமார், ஜெயராஜ், முத்துசேதுபதி, ஆனந்த், மாரிசெல்வம், சஞ்சய், ராமர், விஜய், துரைராஜ், சக்தி, முத்துசெல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. மின்கம்பத்திற்கு இறுதி அஞ்சலி செலுத்தி நூதன போராட்டம்
ராமநாதபுரத்தில் எரியாத மின்விளக்குகள் அமைந்துள்ள மின்கம்பங்களுக்கு பெரியாரிய உணர்வாளர்கள் சார்பில் மாலை அணிவித்து இறுதி அஞ்சலி செலுத்தும் நூதன போராட்டம் நடைபெற்றது.
2. உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு நூதன போராட்டம்
கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு நூதன போராட்டம் நடைபெற்றது.
3. தென்காசியில் இந்து முன்னணியினர் நூதன போராட்டம்
தென்காசியில் இந்து முன்னணியினர் நூதன போராட்டம் நடத்தினர்.
4. இளைஞர் பெருமன்றத்தினர் நூதன போராட்டம்
இளைஞர் பெருமன்றத்தினர் நூதன போராட்டம் நடத்தினர்.
5. இந்து முன்னணியினர் நூதன போராட்டம்
கோவில்களை திறக்க வலியுறுத்தி சிவகாசியில் இந்து முன்னணியினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.