மாவட்ட செய்திகள்

கல்லூரி மாணவர்களுக்கு பரிசு + "||" + Gifts for college students

கல்லூரி மாணவர்களுக்கு பரிசு

கல்லூரி மாணவர்களுக்கு பரிசு
கல்லூரி மாணவர்களுக்கு பரிசு
விருதுநகர்
பாரதியார் நூற்றாண்டு நினைவு தினத்தை முன்னிட்டு விருதுநகர் அரசு அருங்காட்சியகத்தில் பாட்டுக்கொரு புலவன் பாரதி என்ற தலைப்பில் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி நடைபெற்றது. மாவட்டத்தில் உள்ள பல்வேறு கல்லூரிகளில் இருந்து கல்லூரிக்கு 3 பேர் வீதம் இப்போட்டியில் கலந்து கொண்டனர். அதில் முதல் பரிசாக அய்யநாடார் ஜானகியம்மாள் கல்லூரியை சேர்ந்த கவுசிக்குக்கும், இரண்டாவது பரிசை ராஜபாளையம் ஏ.கே.டி. தர்மராஜா கல்லூரியை சேர்ந்த முத்துகவிதாவுக்கும், 3-ம் பரிசாக அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லூரியைச் சேர்ந்த கீதாவுக்கும், அதே கல்லூரியை சேர்ந்த கங்காகாயத்ரி மற்றும் கிருஷ்ணசாமி கலை அறிவியல் கல்லூரியை சேர்ந்த மாரியப்பன் ஆகியோருக்கு ஆறுதல் பரிசும் கிடைத்தது. பரிசுகளை மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் மணிவண்ணன் வழங்கினார். 
தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குனர் சுசிலா தலைமை தாங்கினார். டாக்டர் வினோத் சிறப்புரையாற்றினார் அருங்காட்சியக காப்பாளர் கிருஷ்ணம்மாள் வரவேற்றுப் பேசினார் பேச்சுப் போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

1. செங்கப்பட்டியில் கபடி போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு
கபடி போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.
2. மாணவ-மாணவிகளுக்கு பரிசு
பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
3. நாளை நடக்கும் முகாமில் தடுப்பூசி போடுபவர்களுக்கு பரிசு
பவானி தாலுகாவில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கும் முகாமில் தடுப்பூசி போடுபவர்களுக்கு பரிசு வழங்கப்படும் என்று வருவாய்த்துறையினர் அறிவித்துள்ளனர்.
4. தடுப்பூசி செலுத்திக்கொள்வோருக்கு குலுக்கல் முறையில் பரிசு
5-ம் கட்ட முகாமில் தடுப்பூசி செலுத்திக்கொள்வோருக்கு குலுக்கல் முறையில் பரிசு வழங்கப்படும் என கலெக்டர் தெரிவித்தார்.
5. கீரமங்கலம் பகுதியில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள தயக்கம் காட்டும் பொதுமக்கள் பரிசு அறிவித்து ஊக்கப்படுத்தும் ஊராட்சி
கீரமங்கலம் பகுதியில் கொரோனா தடுப்பூசிகள் போடுவதற்கு பொதுமக்கள் தயக்கம் காட்டுவதால் ஊராட்சி சார்பில் அவர்களை ஊசி போட வைக்கும் முயற்சியாக பரிசு அறிவித்துள்ளது.