மாவட்ட செய்திகள்

கொரோனாவுக்கு ஒருவர் பலி + "||" + One killed for corona in Perambalur

கொரோனாவுக்கு ஒருவர் பலி

கொரோனாவுக்கு ஒருவர் பலி
பெரம்பலூரில் கொரோனாவுக்கு ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று 7 பேரும், அரியலூர் மாவட்டத்தில் 11 பேரும் புதிதாக கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவுக்கு ஏற்கனவே சிகிச்சை பெறுபவர்களில் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த 8 பேரும், அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த 14 பேரும் குணமாகி மருத்துவமனைகளில் இருந்து நேற்று டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர். கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த 44 வயதுடைய ஆண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அனால் அரியலூர் மாவட்ட்த்தில் நேற்று யாரும் கொரோனாவுக்கு உயிரிழக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது பெரம்பலூர் மாவட்டத்தில் 84 பேரும், அரியலூர் மாவட்டத்தில் 135 பேரும் கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் 346 பேருக்கும், அரியலூர் மாவட்டத்தில் 189 பேருக்கும் கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. அரியலூரில் புதிதாக 3 பேருக்கு கொரோனா
அரியலூரில் புதிதாக 3 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
2. ஒருவருக்கு கொரோனா
புதிதாக ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
3. ஒருவருக்கு கொரோனா
ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
4. தமிழகத்தில் மேலும் 740- பேருக்கு கொரோனா தொற்று
கொரோனா தொற்றில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் 765 பேர் குணம் அடைந்துள்ளனர்.
5. கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 4,741- பேருக்கு கொரோனா
கொரொனா பாதிப்பால் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 36,679- ஆக உயர்ந்துள்ளது.