மாவட்ட செய்திகள்

தம்மம்பட்டி அருகே, மீன் பிடிக்க சென்ற இலங்கை தமிழர் ஏரியில் மூழ்கி பலி-மகன் கண்எதிரே பரிதாபம் + "||" + The man who drowned in the lake died

தம்மம்பட்டி அருகே, மீன் பிடிக்க சென்ற இலங்கை தமிழர் ஏரியில் மூழ்கி பலி-மகன் கண்எதிரே பரிதாபம்

தம்மம்பட்டி அருகே, மீன் பிடிக்க சென்ற இலங்கை தமிழர் ஏரியில் மூழ்கி பலி-மகன் கண்எதிரே பரிதாபம்
தம்மம்பட்டி அருகே மீன் பிடிக்க சென்ற இலங்கை தமிழர், தனது மகன் கண்எதிரே தண்ணீரில் மூழ்கி பலியானார்.
தம்மம்பட்டி:
தம்மம்பட்டி அருகே நாகியம்பட்டி இலங்கை தமிழர் முகாமை சேர்ந்தவர் நடராஜன் (வயது 62). இவருக்கு மல்லிகா என்ற மனைவியும், தாமரை செல்வன் என்ற மகனும் உள்ளனர். நடராஜன், தனது மகன் தாமரைச்செல்வனுடன் தம்மம்பட்டி அருகே உள்ள செந்தாரப்பட்டி ஏரிக்கு மீன் பிடிக்க சென்றார். அப்போது நடராஜன் ஏரியினுள் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி தத்தளித்தார். அருகில் இருந்த மகன் தாமரைச்செல்வனுக்கு நீச்சல் தெரியாததால், அவரை மீட்க முடியவில்லை. அவர் காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என கதறிய நிலையில் மகன் கண் எதிரேயே நடராஜன் நீரில் முழ்கி இறந்தார். இந்த சம்பவம் குறித்து தம்மம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.