மாவட்ட செய்திகள்

சென்னை புளியந்தோப்பு பகுதியில் மின்தடையை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் + "||" + Public road blockade in Chennai Puliyanthoppu area condemning the power shutdown

சென்னை புளியந்தோப்பு பகுதியில் மின்தடையை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்

சென்னை புளியந்தோப்பு  பகுதியில் மின்தடையை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்
சென்னை புளியந்தோப்பு குமாரசாமி ராஜாபுரம் பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவில் மின்தடை ஏற்பட்டது. நீண்டநேரம் ஆகியும் மின்சாரம் வராததால் வீடுகளில் தூங்க முடியாமல் அவதிப்பட்ட அப்பகுதியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள், அந்த பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பொதுமக்களுக்கு ஆதரவாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் எழும்பூர் பகுதி செயலாளர் முருகன் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வடசென்னை மேற்கு மாவட்ட செயலாளர் செல்வம் உள்பட கட்சி நிர்வாகிகள் பொதுமக்களுடன் இணைந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்து வந்த பேசின்பிரிட்ஜ் போலீசார், சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போக செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. நாளை மின்தடை
சூலக்கரை ஜி.என்.பட்டி பகுதிகளில் நாளை மின்தடை செய்யப்படுகிறது.
2. சிவகங்கை, காரைக்குடி பகுதியில் நாளை மின்தடை
மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக சிவகங்கை, காரைக்குடி பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
3. நாளை மின் தடை
பராமரிப்பு பணிகளுக்காக நாளை மின்தடை செய்யப்படுகிறது.
4. நாளை மின்தடை
பராமரிப்பு பணிகளுக்காக விருதுநகர் அருகே நாளை மின்தடை செய்யப்படுகிறது.
5. மதகுபட்டி பகுதியில் மின்தடை
மதகுபட்டி பகுதியில் மின்தடை செய்யப்படுகிறது.