மாவட்ட செய்திகள்

காஞ்சீபுரம் அருகே மின்சாரம் தாக்கி குழந்தை சாவு + "||" + Child killed by electric shock near Kanchipuram

காஞ்சீபுரம் அருகே மின்சாரம் தாக்கி குழந்தை சாவு

காஞ்சீபுரம் அருகே மின்சாரம் தாக்கி குழந்தை சாவு
காஞ்சீபுரம் அருகே மின்சாரம் தாக்கி 3 வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.
மின்சாரம் தாக்கியது
காஞ்சீபுரத்தை அடுத்த கீழ்கதிர்பூர், ஒத்தவாடை தெருவை சேர்ந்தவர் ராஜீவ்காந்தி. இவர் ஒரகடத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரது மகன் கபிலேஷ் (வயது 3). வீட்டின் அருகே உள்ள பம்புசெட் அறையில் விளையாடி கொண்டிருந்தான். அப்போது எதிர்பாராதவிதமாக திடீரென அருகில் இருந்த மின் இணைப்பு பெட்டியில் கபிலேஷ் கை வைத்துள்ளான். இதில் குழந்தை கபிலேஷ் மீது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டான்.

சாவு
ஆபத்தான நிலையில் இருந்த கபிலேஷை மீட்டு சிகிச்சைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு டாக்டர்கள் குழந்தையை பரிசோதித்து பார்த்து விட்டு ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து பாலுசெட்டிசத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. காஞ்சீபுரம் அருகே ரூ.24 லட்சம் குட்கா சிக்கியது
காஞ்சீபுரம் அருகே ரூ.24 லட்சம் மதிப்புடைய குட்கா, வாகனங்களை சோதனை செய்தபோது சிக்கியது.
2. காஞ்சீபுரத்தில் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம்
காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
3. காஞ்சீபுரம் மாவட்டத்தில் அமைப்புசாரா தொழிலாளர்கள் பதிவு முகாம்
காஞ்சீபுரம் மாவட்டம் தேவரியம்பாக்கம் ஊராட்சியில் தமிழக அரசின் தொழிலாளர் நலத்துறை சார்பில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான பதிவு முகாம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெற்றது.
4. காஞ்சீபுரம் குருவிமலை பகுதியில் வசிக்கும் திருநங்கைகள் இரு பிரிவினரிடையே மோதல்
காஞ்சீபுரம் குருவிமலை பகுதியில் வசிக்கும் திருநங்கைகள் இரு பிரிவினரிடையே மோதல் தொடர்பாக சாலைமறியல் போராட்டம் நடந்தது.
5. காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் அன்றாட பூஜை நடத்தக்கோரி வழக்கு
காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் அன்றாட பூஜை நடத்தக்கோரி வழக்கு அறநிலையத்துறை பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு.
!-- Right4 -->