மாவட்ட செய்திகள்

தினத்தந்தி புகார் பெட்டி + "||" + complent

தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டி
நோய் பரவும் அபாயம்
சேலம் மாநகராட்சி 28&வது வார்டு செவ்வாய்ப்பேட்டை பால்மார்க்கெட் அருகில் மாரி தெரு பகுதியில் சாக்கடை கால்வாய் தூர்வாரப்படுவது இல்லை. குறைந்த அளவு மழை பெய்தாலும் மழைநீர் சாக்கடை கால்வாய்க்குள் புகுந்து விடுகிறது. இந்த பகுதியில் தேங்கும் குப்பைகளும் அள்ளப்படுவது இல்லை. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக மாநகராட்சி நிர்வாகத்துக்கு பலமுறை புகார் அளித்தும் யாரும் கண்டுகொள்வது இல்லை. எனவே ஏதாவது நோய் பரவும் முன் இந்த பகுதியில் சுகாதார பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
& ஊர்மக்கள், செவ்வாய்ப்பேட்டை, சேலம்.
சாக்கடை கால்வாய்
சேலம் கன்னங்குறிச்சி 2&வது வார்டு சரவணா நகர் பகுதியில் சாக்கடை கால்வாய் வசதி இல்லாததால் பொதுமக்கள் இடையே சண்டை சச்சரவு ஏற்படுகின்றன. சாலையில் கழிவுநீர் தேங்குவதால் நோய் பரவும் அபாயமும் உள்ளது. இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளை சந்தித்து புகார் தெரிவித்தும், எந்தவித பயனும் இல்லை. ஒரு வருட காலமாகியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த பகுதியில் சாக்கடை கால்வாய் அமைத்து தர வேண்டும்.
&சுரேஷ், கன்னங்குறிச்சி, சேலம்.
===
முககவசம் கட்டாயம்
அரசு பஸ்களில் பெரும்பாலான டிரைவர், கண்டக்டர்கள் முககவசம் அணிவது இல்லை. அவர்களே முககவசம் அணிவில்லை என்றால் பயணிகளை எப்படி முககவசம் அணிய சொல்வார்கள். 3&வது அலையை கட்டுப்படுத்தவும், அதிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளவேண்டிய கட்டாயத்திலும் நாம் உள்ளோம். எனவே போக்குவரத்துத்துறை அதிகாரிகள் பஸ்களில் முககவசம் அணிவதை கட்டாயமாக்க வேண்டும். அதற்கான நடவடிக்கையை உடனே எடுக்க வேண்டும்.
&அருணாராணி, தாதகாப்பட்டி, சேலம்.

===
பகலில் எரியும் உயர்கோபுர விளக்கு
தர்மபுரி மாவட்டம் தொப்பூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சில நேரங்களில் பகலிலும் உயர்கோபுர விளக்கு எரிந்து கொண்டே இருக்கிறது. இதுபற்றி சுகாதார நிலையத்திலும், மின்வாரியத்திலும் பலமுறை புகார் அளித்து விட்டோம். ஆனால் இதனை யாரும் கண்டுகொள்வது இல்லை. எனவே உயர் அதிகாரிகள் இதனை கவனத்தில் கொண்டு இரவு நேரங்களில் மட்டும் உயர்கோபுர மின்விளக்கு எரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
&ஊர்மக்கள், தர்மபுரி.


கிருஷ்ணகிரி& தர்மபுரி தேசிய நெடுஞ்சாலையில் திம்மாபுரம்& காவேரிப்பட்டணம் செல்லும் சர்வீஸ் ரோட்டில் இரவில் மின்விளக்குகள் இருந்தும் எரிவது இல்லை. மின்விளக்குகள் எரியாமல் இருப்பதால், இந்த பகுதியில் சாலையோரங்களில் உள்ள குப்பைகளை சிலர் தீ வைத்து எரிக்கின்றனர். எனவே இந்த பகுதியில் இரவில் தெருவிளக்குகளை எரியச் செய்ய வேண்டும். 
&இளங்கோ, திம்மாபுரம், கிருஷ்ணகிரி.

தர்மபுரி மாவட்டம் பஞ்சப்பள்ளி கிராமத்தில் பஸ் நிறுத்தத்தில் கடந்த 6 மாதங்களாக சோடியம் மின்விளக்கு மற்றும் தெருவிளக்குகள் எரிவது இல்லை. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
&ஊர்மக்கள், பஞ்சப்பள்ளி, தர்மபுரி.
===
வீட்டுக்குள் புகுந்த மழைநீர் (படம் உண்டு)
நாமக்கல் மாவட்டம் பெரியமணலி கிராமம் ஜேடர்பாளையம் அருந்ததியர் தெரு பகுதிகளில் கடந்த 10 ஆண்டுகளாக மழைக்காலங்களில் வீட்டுக்குள் வெள்ளம் சூழ்ந்துவிடுகிறது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். இந்த பகுதியை சரி செய்ய சொல்லி பலமுறை ஊராட்சியில் மனு கொடுத்தும் பலன் இல்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து தீர்வு காண வேண்டும். 
&மணிகண்டன், பெரியமணலி, நாமக்கல்.
===
நாய்கள் தொல்லை
சேலம் மாவட்டம் தாரமங்கலம் ரோடு சாமுண்டி நகரில் பல நாட்களாக நாய் தொல்லைகள் அதிகம் உள்ளது. நாய் உரிமையாளர்கள் நாய்களை கட்டிப்போடுவது  இல்லை. அந்த வழியாக செல்பவர்களை நாய்கள் துரத்தி துரத்தி கடிக்க வருகிறது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பயந்தபடி அந்த பகுதியை கடந்து செல்ல வேண்டிய உள்ளது. எனவே அதிகாரிகள் நாய்களை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
&வாசுதேவன், சேலம்.
===
பயமுறுத்தும் மேற்கூரை  (படம் உண்டு)
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகராட்சியில் உள்ள கட்டிடத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மேற்கூரை சீரமைக்கப்பட்டது. காற்றுக்கு அந்த மேற்கூரை பெயர்ந்து நிற்கிறது. பலத்த காற்று வீசினால் நிச்சயம் மேற்கூரை முழுவதும் பெயர்ந்து விழுந்து ஏதாவது அசம்பாவிதம் நிகழ்ந்து விடும். எனவே பயமுறுத்தும் இந்த மேற்கூரையை உடனே சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
&ஜி.பாஸ்கர், ராசிபுரம்.
===
புதிய பாலம் கட்டப்படுமா?
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் ஊராட்சி ஒன்றியம் பாலேகுறி முதல் காவேரிப்பட்டணம் கிராம சாலையில் அமைந்துள்ள ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட சிறு பாலம் ஆடு, மாடுகள் மேய்ச்சலுக்கு சென்று வர காடுகளுக்கு சென்று வர கட்டப்பட்டது. அந்த பழைய பாலம் பதிலாக புதிதான பாலத்தை விரிவாக்கம் செய்து கட்டினால் பஸ்கள் சென்று வர பொதுமக்களுக்க பயன் உள்ளதாக இருக்கும். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
&முருகேசன், பாலேகுறி, கிருஷ்ணகிரி.
===
குப்பை தொட்டி வைக்கப்படுமா?
சேலம் மேற்கு நரசோதிப்பட்டியில் உள்ள ஓம்சக்தி நகர் பகுதியில் சாலை ஓரங்களில் குப்பைகள் தேங்கி கிடப்பதால் குப்பைகளில் இருந்து துர்நாற்றம் வீசுவதால் நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் தெருநாய்கள் தொல்லையும் உள்ளது. அந்த வழியாக வாகனத்தில் செல்லும் போது நாய்கள் அடிக்கடி குறுக்கே ஓடுவதால் அதன் மீது மோதி சிலர் கீழே விழுந்து காயம் அடைகின்றனர். எனவே குப்பை தொட்டி வைக்கப்பட்டால் சுகாதார சீர்கேடு ஏற்படாது.
&துளசிமணி, ஓம்சக்தி நகர், சேலம்.
===
பஸ் நிலையத்தில் இருசக்கர வாகனங்கள் 
சேலம் புதிய பஸ் நிலையத்தில் இரு சக்கர வாகனங்கள்  உள்ளே வரக்கூடாது. வந்தால் தண்டிக்க படுவார்கள் என்று காவல் துறையினர் ஒலி பெருக்கியில் விளம்பரம் செய்து கொண்டே இருக்கின்றனர். ஆனால் பலர் இதை கண்டு கொள்வதே இல்லை. இந்த இருசக்கர வாகனங்களால் பயணிகளுக்கு மிகுந்த சிரமம் ஏற்படுகின்றது. சில சமயம் சிறு விபத்துக்களும் நடக்கின்றன. எனவே பயணிகள் நலன் கருதி காவல் துறை நடவடிக்கை எடுத்து புதிய பஸ் நிலையத்திற்குள் இரு சக்கர வாகனம் வருவதை தடை செய்ய வேண்டும்.
&ஷி.ஜான், குப்தாநகர், சேலம்.
===
வெளியே தெரியும் இரும்பு கம்பி (படம் உண்டு)
சேலம் சூரமங்கலம் பகுதிக்கு உட்பட்ட ஜாகீர் அம்மாபாளையம் 2&வது வார்டில் சாலையில் சாக்கடை கால்வாய் பாலம் உடைந்து கம்பிகள் வெளியே தெரியும்படி உள்ளது. அந்த பகுதியில் வாகன ஓட்டிகள் மிகவும் இன்னலுக்கு ஆளாகும் நிலையில் உள்ளனர். மேலும் இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் இரும்பு கம்பிகளால் கீழே விழுந்து காயம் அடைகின்றனர். ஏதும் உயிர்ப்பலி ஏற்படும் முன் இதனை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
&ஊர் மக்கள், சூரமங்கலம், சேலம்.
===
குடிநீர் தட்டுப்பாடு
சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் பேரூராட்சி 3&வது வார்டில் பெரிய மாரியம்மன் கோவில் தெருவில் சிலர் பொது குழாயில் மின் மோட்டார் வைத்து குடிநீரை உறிஞ்சி எடுக்கின்றனர். இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது. இதுகுறித்து பலமுறை கொங்கணாபுரம் பேரூராட்சி அலுவலகத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே இதில் உயர் அதிகாரிகள் தனிக்கவனம் செலுத்தி குடிநீர் தட்டுப்பாட்டை போக்கவேண்டும் என்பதே அந்த ஊர் மக்களின் எதிர்பார்ப்பு. 
&பெ.வெங்கடேசன், கொங்கணாபுரம், சேலம்.

=== 
மேட்டூர் குடிநீர் வேண்டும்
சேலம் மேற்கு பெருமாம்பட்டி மேல்காடு மாரியம்மன் கோவில் அருகில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு கடந்த 6 நாட்களாக மேட்டூர் குடிநீர் சரிவர வருவது இல்லை. 2 நாட்களுக்கு முன்பு சிறிதளவு தண்ணீர் மட்டுமே வந்தது. எனவே  இந்த பகுதியில் மேட்டூர் குடிநீர் இல்லாமல் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். இதுபற்றி பல முறை புகார் தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை. மேட்டூர் குடிநீர் வழங்க உரிய ஏற்பாடு செய்ய அதிகாரிகள் நடவடிக்க எடுக்க வேண்டும்.
&கி.சித்தன், பெருமாம்பட்டி, சேலம்.
===
பாதியில் நிற்கும் சாலை பணி
சேலம் மாவட்டம் முருங்கப்பட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட பொதுமக்கள், கடந்த 2020&ம் ஆண்டில் இந்த பகுதியில் தார்சாலை அமைப்பதற்காக அடிக்கல் நாட்டினர். அதாவது மாந்தோப்பு& மோட்டூர் வரையும், மாந்தோப்பு& காரதோப்பூர் வரையும் தேர்தல் நேரத்தில் அவசர அவசரமாக சாலை அமைத்தனர். அதுவும் மாந்தோப்பு முதல் மோட்டூர் வரை மட்டுமே சாலை அமைக்கப்பட்டது. மீதமுள்ள சாலையை அதாவது மாந்தோப்பு முதல் காரதோப்பூர் வரை அமைக்கச் சொல்லி பல முறை புகார் கொடுத்தும் பலன் இல்லை. எனவே பாதியில் நிற்கும் இந்த சாலை பணியை உடனே தொடங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
&ஊர்மக்கள், முருங்கப்பட்டி, சேலம்.
===
===
முட்புதர்கள் அகற்றப்படுமா?
நாமக்கல் மாவட்டம் பில்லா நல்லூரில் 13&வது வார்டில் காலியாக உள்ள நிலத்தில் முட்புதர்கள் வளர்ந்து காடு போன்று காட்சி அளிக்கிறது. முட்புதர்கள் அதிகளவில் வளர்ந்து உள்ளதால் பாம்பு, விஷப்பூச்சிகள் வீட்டுக்குள் வருகின்றன. எனவே இந்த முட்செடிகளை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
&ஊர்மக்கள், பில்லாநல்லூர்,நாமக்கல்.
===