மாவட்ட செய்திகள்

விவசாயிக்கு அரிவாள் வெட்டு + "||" + Sickle cut for farmer

விவசாயிக்கு அரிவாள் வெட்டு

விவசாயிக்கு அரிவாள் வெட்டு
கயத்தாறு அருகே விவசாயிக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
கயத்தாறு:

கயத்தாறு அருகே உள்ள வடக்கு இலந்தைகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் நல்லையா மகன் வெள்ளைச்சாமி (வயது 35). விவசாயி. இவர் நேற்று முன்தினம் தனது வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது, அதே ஊரைச் சேர்ந்த காளிராஜ் என்பவர் வந்தார். காளிராஜிடம் வெள்ளைச்சாமி எங்கு செல்கிறாய் என்று கேட்டார்.

அப்போது, அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த காளிராஜ் அரிவாளால் வெள்ளைச்சாமியை வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து கயத்தாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து, காளிராஜை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. பெண்ணை கொன்ற வழக்கில் ஜாமீனில் வந்த கணவருக்கு அரிவாள் வெட்டு
மதுரையில் பெண்ணை கொன்ற வழக்கில் ஜாமீனில் வந்த கணவருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. தப்பி ஓடிய 2 பேருக்கு வலைவீசி தேடி வருகின்றனர்.
2. தந்தை- மகனுக்கு அரிவாள் வெட்டு
முனைஞ்சிப்பட்டி அருகே தந்தை-மகனுக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதுதொடர்பாக அண்ணன், தம்பி கைது செய்யப்பட்டனர்.
3. ஓடும் பஸ்சில் கண்டக்டருக்கு சரமாரி வெட்டு
ஓடும் பஸ்சில் கண்டக்டரை அரிவாளால் வெட்டிய தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
4. விசாரணைக்கு சென்ற போலீஸ் ஏட்டுவுக்கு அரிவாள் வெட்டு
விசாரணைக்கு சென்ற போலீஸ் ஏட்டுவை அரிவாளால் வெட்டிய தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்
5. கோவில் பூசாரிக்கு அரிவாள் வெட்டு
கோவில் பூசாரிக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.