மாவட்ட செய்திகள்

சிறுமியை திருமணம் செய்த டிரைவர் போக்சோ சட்டத்தில் கைது + "||" + The driver who married the girl was arrested under the Pokcho Act

சிறுமியை திருமணம் செய்த டிரைவர் போக்சோ சட்டத்தில் கைது

சிறுமியை திருமணம் செய்த டிரைவர் போக்சோ சட்டத்தில் கைது
சிறுமியை திருமணம் செய்த டிரைவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
செந்துறை:
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள ஆதிகுடிக்காடு கிராமத்தை சேர்ந்த ராமச்சந்திரனின் மகன் அஜித்குமார்(வயது 25). இவர் சரக்கு வேன் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த ஜனவரி மாதம் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த சிறுமியை காதலித்து திருமணம் செய்தார். இதுகுறித்த புகாரின்பேரில் பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அஜித்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் அவர் ஜாமீனில் வெளியே வந்தார். இது தொடர்பான வழக்கு கோர்ட்டில் நடந்து வருகிறது.
இந்தநிலையில் கடந்த மாதம் மற்றொரு 16 வயதுடைய சிறுமியை, அஜித்குமார் காதலித்து திருமணம் செய்துள்ளார். இது குறித்து அவரது பெற்றோர் செந்துறை போலீசில் கொடுத்த புகாரின்பேரில், போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து அஜித்குமாரை ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் கைது செய்தனர். மேலும் அவருடன் இருந்த சிறுமியை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். மேலும் அஜித்குமாரை செந்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. 10 வயது சிறுவனுடன் கட்டாய உறவு மோசான பாலியல் துன்புறுத்தல் ஆகாது - அலகாபாத் ஐகோர்ட்டு தீர்ப்பு
10 வயது சிறுவனை கட்டாயப்படுத்தி உறவு வைத்துக்கொண்ட குற்றவாளிக்கு போக்சோ சிறப்பு நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட சிறைத் தண்டனையை குறைத்து அலகாபாத் ஐகோர்ட் வழங்கிய தீர்ப்பு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
2. மகளை பாலியல் பலாத்காரம் செய்து, அரசியல் பிரமுகர்களுக்கு விருந்தாக்கிய கொடூர தந்தை
சிறுமியின் தந்தை, அரசியல் கட்சி பிரமுகர்கள் உட்பட 28 பேர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.