மாவட்ட செய்திகள்

தள்ளுவண்டிகளை அப்புறப்படுத்திய நகராட்சியை கண்டித்து வியாபாரிகள் சாலை மறியல் + "||" + Merchants roadblock condemning the municipality for disposing of the trolleys

தள்ளுவண்டிகளை அப்புறப்படுத்திய நகராட்சியை கண்டித்து வியாபாரிகள் சாலை மறியல்

தள்ளுவண்டிகளை அப்புறப்படுத்திய நகராட்சியை கண்டித்து வியாபாரிகள் சாலை மறியல்
தள்ளுவண்டிகளை அப்புறப்படுத்திய நகராட்சியை கண்டித்து வியாபாரிகள் சாலை மறியல் செய்தனர்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் பஸ் உள்ளே செல்லும் வழியில் சாலையோரத்தில் தள்ளுவண்டிகளில் கம்மங்கூழ், பழங்கள், கோழி மற்றும் மீன் வறுவல் வைத்து வியாபாரிகள் வியாபாரம் செய்து வருகின்றனர். இந்த தள்ளுவண்டி கடைகள் இடையூறாக இருப்பதாக கூறி, நேற்று காலை பெரம்பலூர் நகராட்சி ஊழியர்கள் திடீரென்று அந்த தள்ளுவண்டிகளை அந்த இடத்தில் இருந்து அப்புறப்படுத்தி, நகராட்சி அலுவலகம் அருகே இழுத்து சென்றனர். இதனை கண்ட தள்ளுவண்டி உரிமையாளர்கள் மற்றும் சக தள்ளுவண்டி வியாபாரிகள் நகராட்சியை கண்டித்து, அந்த தள்ளுவண்டிகளுடன் திடீரென்று பெரம்பலூர் புதிய பஸ் நிலையம் முன்பு சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மேலும் தொடர்ந்து இந்த செயல்களில் ஈடுபடும் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பல்வேறு கோஷங்களை எழுப்பினர். இது குறித்து தகவலறிந்த பெரம்பலூர் சரக போலீஸ் துணை சூப்பிரண்டு சஞ்சீவ்குமார் தலைமையில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் முருகேசன், சுப்பையன் மற்றும் போலீசார் அங்கு வந்து, போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் கூறுகையில், நாங்கள் யாருக்கும் இடையூறு இல்லாமல் வியாபாரம் செய்து வருகிறோம். ஆனால் எங்களின் தள்ளுவண்டிகளை நகராட்சி ஊழியர்கள் அப்பறப்படுத்தியதோடு, சேதப்படுத்தியுள்ளனர். எங்களை தொடர்ந்து அந்தப்பகுதியில் வியாபாரம் செய்ய அனுமதிக்க வேண்டும். இது தொடர்பாக போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர். அப்போது புகார் கொடுத்தால் உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் கூறியதை தொடர்ந்து அவர்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதையடுத்து போலீசார் போக்குவரத்தினை ஒழுங்குபடுத்தினர்.

தொடர்புடைய செய்திகள்

1. சாக்கடை கால்வாயை ஆக்கிரமித்து வீட்டு வசதி வாரிய குடியிருப்பு கட்டுமான பணி: பொதுமக்கள் திடீர் சாலை மறியல் அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு பின் சமரசம்
புதுக்கோட்டையில் சாக்கடை கால்வாயை ஆக்கிரமித்து வீட்டு வசதி வாரிய குடியிருப்பு கட்டுமான பணி நடைபெறுவதை கண்டித்து பொதுமக்கள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு பின் சமரசமடைந்தனர்.
2. வடலூரில் வாரச்சந்தை இடமாற்றம்; வியாபாரிகள் சாலை மறியல்
வடலூரில் வாரச்சந்தையை இடமாற்றம் செய்ததை கண்டித்து வியாபாரிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
3. இடப்பிரச்சினை காரணமாக பொய் புகார் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு
இடப்பிரச்சினை காரணமாக கொடுக்கப்பட்ட பொய் புகார் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி புல்வயலில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
4. மாடுகளுடன் இளைஞர்கள் சாலை மறியல்
மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நடத்தக்கோரி மாடுகளுடன் இளைஞர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் கச்சிராயப்பாளையம் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
5. குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்
குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.