மாவட்ட செய்திகள்

காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குச்சீட்டுகள் அச்சடிக்கும் பணி தீவிரம் + "||" + Intensity of printing of ballot papers for local elections in Kanchipuram district

காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குச்சீட்டுகள் அச்சடிக்கும் பணி தீவிரம்

காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குச்சீட்டுகள் அச்சடிக்கும் பணி தீவிரம்
காஞ்சீபுரம் மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குச்சீட்டுகள் அச்சடிக்கும் பணியினை மாவட்ட கலெக்டர் டாக்டர் மா.ஆர்த்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வருகிற 6 மற்றும் 9-ந் தேதி 2 கட்டங்களாக நடைபெறுகிறது. ஊரக உள்ளாட்சி தேர்தலில் மாவட்ட ஊராட்சி குழு கவுன்சிலர், ஒன்றியக்குழு கவுன்சிலர், கிராம ஊராட்சி மன்ற தலைவர், சிற்றூராட்சி வார்டு கவுன்சிலர்கள் என 4 பதவிகளுக்கு வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.


சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தலில் வாக்குப்பதிவு எந்திரம் பயன்படுத்தும் நிலையில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் வாக்குச்சீட்டு பயன்படுத்தப்பட உள்ளது. ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் இறுதி செய்யப்பட்டு வாக்காளர்கள் வாக்களிக்க சின்னங்களும் ஒதுக்கீடு செய்யும் பணி நிறைவடைந்தது.

வாக்குச்சீட்டுகள் அச்சடிக்கும் பணி

இந்நிலையில் காஞ்சீபுரம் கூட்டுறவு அச்சகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்குச்சீட்டுகள் அச்சடிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஊரக உள்ளாட்சி தேர்தலில் 4 பதவிகளுக்கு போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்கள் மற்றும் சின்னங்கள் சரிபார்க்கப்பட்டு 4 வண்ணங்களில் வாக்குச்சீட்டுகள் அச்சடிக்கும் பணியை கூட்டுறவு அச்சக பணியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

கூட்டுறவு அச்சகத்தில் நடைபெற்றுவரும் வாக்குச் சீட்டுகள் அச்சடிக்கும் பணியை காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் மா.ஆர்த்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஸ்ரீதேவி மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடத்த வேண்டும்
தமிழக நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்துவது தொடா்பாக அனைத்து கட்சியினருடன் தேர்தல் ஆணையம் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் ஒரே கட்டமாக தோ்தல் நடத்த வேண்டும் என எல்லா கட்சியினரும் வலியுறுத்தினர்.
2. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் எதிரொலி: புதிய மாநகராட்சி, நகராட்சிகளுக்கு கவுன்சிலர் எண்ணிக்கை நிர்ணயம்
நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதால், புதிய நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான கவுன்சிலர்கள் எண்ணிக்கையை நிர்ணயித்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.
3. பண்டைய இந்தியாவில் தேர்தல் நடத்தப்பட்டதற்கு உத்திரமேரூர் கல்வெட்டுகளே சாட்சி: மோடி
பண்டைய இந்தியாவில் தேர்தல் நடத்தப்பட்டதற்கு உத்திரமேரூர் கல்வெட்டுகளே சாட்சி என்று ஜோ பைடன் நடத்திய மாநாட்டில் மோடி பேசினார்.
4. தேர்தல் ஆணையாளர்கள் நியமனம்: காஞ்சீபுரம் உள்பட 15 மாவட்டங்களில் அ.தி.மு.க. உள்கட்சி தேர்தல்
காஞ்சீபுரம் உள்பட 15 மாவட்டங்களில் முதல்கட்ட அ.தி.மு.க. உள்கட்சி தேர்தல் வருகிற 13, 14-ந்தேதிகளில் நடக்கிறது. இதற்காக தேர்தல் ஆணையாளர்களை நியமித்து ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.
5. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு.
!-- Right4 -->