மாவட்ட செய்திகள்

திருவள்ளூரில் கொரோனா தடுப்பூசி முகாமை மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ஆய்வு + "||" + Corona Vaccine Camp in Tiruvallur inspected by the Public Welfare Secretary

திருவள்ளூரில் கொரோனா தடுப்பூசி முகாமை மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ஆய்வு

திருவள்ளூரில் கொரோனா தடுப்பூசி முகாமை மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ஆய்வு
திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட உழவர் சந்தை, பஸ் நிலையம், டி.இ.எல்.சி பள்ளி ஆகிய இடங்களில் நேற்று மாபெரும் கொரோனா தடுப்பூசி போடும் சிறப்பு முகாம் நடைபெற்றது.
இந்த கொரோனா தடுப்பூசி போடும் சிறப்பு முகாமை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது, திருவள்ளூர் மாவட்டத்தில் ஏற்கனவே திருவேற்காடு உள்பட 2 நகராட்சிகளில் 100 சதவிகிதம் முதல் தவணை தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது பாராட்டுக்குரியது. அதனைத் தொடர்ந்து திருவள்ளூர் நகராட்சியும் 100 சதவிகித இலக்கை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் இதுவரை 4 கோடியே 79 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. மழைக்காலம் என்பதால் டெங்கு மற்றும் இதர தொற்றுநோய்களை கண்காணிப்பதற்கு அனைத்து மாவட்டங்களிலும், மாவட்ட கலெக்டர் தலைமையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என கூறினார்.

இந்த ஆய்வின்போது திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ், திருவள்ளூர் மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் டாக்டர் ஜவகர்லால், திருவள்ளூர் நகராட்சி ஆணையர் சந்தானம், வெங்கத்தூர் முதல்நிலை ஊராட்சி மன்ற தலைவர் சுனிதா பாலயோகி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.தொடர்புடைய செய்திகள்

1. திருவள்ளூரில் உள்ள அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை மையத்தை அமைச்சர், கலெக்டர் ஆய்வு
திருவள்ளூரில் உள்ள அரசு தலைமை மருத்துவமனையில் 500 படுக்கைகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையத்தை அமைச்சர், கலெக்டர் நேரில் பார்வையிட்டனர்.
2. திருவள்ளூரில் அமாவாசையை முன்னிட்டு வீரராகவ பெருமாள் கோவிலில் திரண்ட பக்தர்கள்
திருவள்ளூரில் அமாவாசையை முன்னிட்டு வீரராகவ பெருமாள் கோவிலில் பொதுமக்கள் சாமி தரிசனம் செய்ய குவிந்தனர்.
3. திருவள்ளூரில் நஷ்டஈடு வழங்காததை கண்டித்து அரசு பஸ் சிறைபிடிப்பு
திருவள்ளூரில் நஷ்டஈடு வழங்காததை கண்டித்து அரசு பஸ்சை கோர்ட்டு ஊழியர்கள் சிறைபிடித்ததால் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.
4. திருவள்ளூரில் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுடன் திரைப்படம் பார்த்த கலெக்டர்
திருவள்ளூரில் உள்ள எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் என 50-க்கும் மேற்பட்டோருடன் அங்குள்ள திரையரங்குக்குள் அமர்ந்து திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் , திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் திரைப்படத்தை கண்டுகளித்தனர்.
5. திருவள்ளூரில் உள்ள கோர்ட்டு வளாகத்துக்குள் புகுந்த அரியவகை ஆஸ்திரேலிய ஆந்தை
திருவள்ளூரில் உள்ள மாவட்ட ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகம் உள்ளே நேற்று முன்தினம் மாலை அரியவகை ஆஸ்திரேலிய ஆந்தை புகுந்தது.